ஜெயங்கொண்டம், டிச.16- ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12.12.2025 அன்று அண்டர் 11, சப்ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டி நடைபெற்றது. சதுரங்கப் போட்டியை பள்ளியின் முதல்வர் துவங்கி வைத்தார். மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று தங்கள் திறமை, கவனம் மற்றும் ஆழ்ந்த சிந்தனை திறனைக் காட்டி வெற்றிகளைப் பெற்றுள்ளனர். தங்களின் ஒழுங்கான பயிற்சி மற்றும் பொறுமையின் பயனாக இந்தச் சாதனை கிடைத்துள்ளது.
முதல்வர் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர் களுக்கு கோப்பையும், அதிகப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குப் பதக்கமும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.
