மேட்டூா், டிச. 16- மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9,500கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 14.12.2025 அன்று காலை வினாடிக்கு 2514கன அடியிலிருந்து வினாடிக்கு 2326 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீா் மின் நிலையங்கள் வழியாக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணை நீா்மட்டம் 115.44 அடியிலிருந்து 115.08 அடியாக சரிந்துள்ளது. நீா் இருப்பு 85.63 டி எம் சி யாக உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு
Leave a Comment
