எனக்கு தந்தை பெரியாரை நேரடியாக தெரியாது. ஆனால் அவரைப் பற்றி நிறைய சொல்லிக் கொடுத்து அறிமுகப்படுத்தியவர் தான் என் அம்மா. அவர் அதை செய்திருக்கிறார் இதை செய்திருக்கிறார் என்பதை எல்லாம் என் அம்மா கூறியதை கடந்த நான்கு அய்ந்து ஆண்டுகளாக அவருடைய புத்தகங்களை நன்றாக படித்து புரிந்து கொண்டுள்ளேன்.
இன்று கூட உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் இருந்து வருகின்றது ஆண், பெண் வித்தியாசம் ஜாதி, மத, நிற பேதங்கள் இந்தியா முழுவதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதைப் பற்றி பலரும் சிந்தித்தும் பேசியும் எழுதியும் வருகின்ற சூழ்நிலையில் எனக்கு ஆச்சரியமான விசயம் என்னவென்றால் இவைகளைப் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் அவர்கள் சிந்தித்திருக்கிறார், பேசியிருக்கிறார் என்பதுதான். அதுவும் நம்ம ஊரில் இருந்து ஒருவர் இந்த பேதங்களை குறித்து பேசியிருக்கிறார் என்றால் எனக்கு அது பிரமிப்பாக இருக்கிறது.
அவருடைய தேவை இன்றும் அவசியமாக இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் கூட உலகம் இத்தகைய பிடிகளில் இருந்து மாறிய பின்னர் தன்னுடைய பெயரை மறந்து விட வேண்டும் என்றும் தன்னுடைய அவசியம் இருக்கக் கூடாது என்பதுதான் தனக்கு கிடைக்கிற வெற்றி என்று பெரியார் சொல்லி இருக்கிறார். என்னுடைய இறப்புக்குள் அது நடக்க வேண்டும் என்று நானும் எண்ணி வருகிறேன்.
இப்படி இளம் பெண் ஒருவர் புத்தகக் காட்சியில் பெரியார் அரங்கத்திற்கு வந்திருந்தவர் தன்னுடைய கருத்துகளை திறந்த மனதுடன் பதிவு செய்துள்ளார். முழுமையான அவருடைய கருத்துகளை அறிய Periyar Vision OTT-இல் இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வை அன்றே சொன்ன பெரியார் என்ற தலைப்பில் காணுங்கள்
– பி.கவுசல்யா, பாண்டிச்சேரி

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com

