சென்னை, டிச. 16- தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு மாநில மருத்துவ சார்நிலைப் பணியின் கீழ் வரும் ரேடியோகிராபர் (கதிர்வீச்சு நிபுணர்) பணியில் 67 காலி இடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி: ரேடியோ டயக்னோசிஸ் டெக்னாலஜியில் 2 ஆண்டுகால டிப்ளமோ படித்தவர்கள். ரேடியோகிராபி & இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ டயக்னோசிஸ் டெக்னாலஜி, ரேடியாலஜி & இமேஜிங் டெக்னாலஜி ஆகியவற்றில் பிஎஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு: 32 வயது.
எஸ்.சி., எஸ்.சி – அருந்ததியர், எஸ்.டி., பி.சி., பி.சி – முஸ்லிம், எம்.பி.சி., டி.என்.சி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை: விண்ணப்ப தாரர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப் படுவார்கள். மொத்தமுள்ள 100% வெயிட்டேஜ் மதிப்பெண் கீழ்வருமாறு அளிக்கப்படும்: எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு: 20% பிளஸ் 2 தேர்வுக்கு: 30% நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கு: 50%இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.
உள் ஒதுக்கீடு: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மொத்த காலி இடங்களில் 20% உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: உரிய கல்வித் தகுதி உடையவர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளம் (www.mrb.tn.gov.in) வாயிலாக ஜனவரி 4-ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள்: விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், சமூக இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியான காலி இடங்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் மேற்கண்ட இணையதளம் மூலம் விரிவாக அறிந்துகொள்ளலாம்
