மன்னை மு.இராமதாஸ் முதலாமாண்டு நினைவு நாள் தெருமுனைக் கூட்டம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

11.12.2025 அன்று மாலை 6.00 மணி அளவில் மன்னார்குடி  மேனாள் நகரத் தலைவர் மறைந்த மு.இராமதாஸ் அவர்களின் முதலாமாண்டு நினைவுநாளினை முன்னிட்டு மன்னார்குடி ஒன்றிய நகர திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத்தின்  சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ந.இன்பக்கடல் வரவேற்புரை ஆற்றினார். .நகர கழகத் தலைவர் எஸ்.என்.உத்திராபதி தலைமை வகித்தார்.

மாவட்டத்தலைவர் ஆர்.பி.எஸ்..சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கோ.கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் வி.புட்பநாதன்,  பகுத்தறிவாளர் கழக மாவட்டத்தலைவர் வை.கவுதமன், கழக மன்னை ஒன்றிய தலைவர் மு.தமிழ்ச்செல்வன், மன்னை ஒன்றிய செயலாளர் கா.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் தங்க.வீரமணி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் துணைத் தலைவர் சா.முரளிதரன், மாவட்ட இளைஞரணி மேனாள் தலைவர் மன்னை சித்து, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்
இரா.அழகரசன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் இரா .திலீபன், ஆகியோர் முன்னிலை வகித்து நினைவுரை ஆற்றினார்கள்.

நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்
சி. ரமேஷ் தொடக்க உரையாற்றி தெருமுனை பிரச்சாரக்கூட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கழகப்பேச்சாளர் இராம.அன்பழகன் இராமதாஸ் அவர்களின் நினைவுகளையும், அவர் இயக்கத்திற்கு ஆற்றிய தொண்டினையும் பட்டியலிட்டு அவரின் பெருமைகளை நினைவுபடுத்தி இயக்கத் தோழர்கள் இயக்கத்திற்கு எப்படி உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு இராமதாஸ் அவர்கள் உதாரணம் என்றும் கூறினார். மேலும், திராவிடத்தை அழிக்க நினைப்பவர்கள் பட்டியல் நாளும் நீளுகிறது ஆனால் தமிழரின் நலம் காக்கும் திராவிடம் செழிப்புடன் வாழுகிறது. மத்தியில் ஆளும் ஒன்றிய அரசு தனக்கு இருக்கும் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்தி தமிழ் நாட்டின் நலனை கெடுக்க எண்ணுகிறது, திராவிட மாடல் முதலமைச்சர் அதனை முறியடித்து சிறப்பாக தமிழ்நாட்டை வழி நடத்துகிறார். இதனை உணர்ந்து தமிழ்நாட்டு மக்கள் செயல்பட வேண்டும் என்று உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு ப.க.இணைச்செயலாளர் இரா.கோபால், பகுத்தறிவாளர்கழக நகரத்தலைவர் கோவி.அழகிரி நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சதா. அய்யப்பன், மன்னை.சிவா.வணங்காமுடி, மேலதிருப்பலக்குடி எம்.கோவிந்தராஜ்,  கோட்டூர் ஒன்றிய ப.க. தலைவர் செ.ராமலிங்கம், கோட்டூர் கதிரவன், நகர இளைஞரணித் தலைவர் மா.மணிகண்டன், கோட்டூர் கலைச்செல்வன் மன்னார்குடி வெங்கட்ராமன், மன்னர்குடி கே.ரத்தினவேல், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆர்.மதி ரவி, கைலை.ஊமத்துரை, கவிஞர் கோ.செல்வம், மேலவாசல் கோ.திரிசங்கு, மேலவாசல் குணசேகரன், மன்னார்குடி இந்திரஜித், கோர்ட்டு ஒன்றிய ப.க.செயலாளர் சுருளிராஜன், நெம்மேலி ஆர்.பாலகிருஷ்ணன், மன்னார்குடி சா.அறிவானந்தம், மன்னார்குடி ஜே.சம்பத் கோட்டூர் ஒன்றியசெயலாளர் எம்.பி.குமார், கதிரவன், கலைச்செல்வன், மேலதிருப்பல்லாக்குடி ஜெ.அருளரசன், பூவனூர் அனந்தராமன், நீடாமங்கலம் கே.எஸ்.கே.மேகநாதன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் க.இராஜேஷ் கண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் ச.சாருக்கான், பூவனூர் அனந்தராமன், ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்வில் முன்னதாக மாலை 5 மணி அளவில் இராமதாஸ் அவர்களின் இல்லம் சென்று அவருடைய படத்திற்கு கழகத் தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் இறுதியாக  நகர செயலாளர் செ.அழகேசன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *