டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வி.பி-ஜி ராம்-ஜி மசோதா: பெயர் மாறும் 100 நாள் வேலை திட்டம்! காந்தி பெயர் நீக்கம்! நிதியை 90% லிருந்து.. 60% ஆக குறைகிறது! இந்த அம்சங்களை அடங்கிய புதிய மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக நேற்று அறிமுகப்படுத்தப்படவில்லை.
* ‘காந்தியடிகள் மீது வன்மம்’ – 100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* யுஜிசி, ஏஅய்சிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை கலைத்து உயர்கல்விக்கு ஒரே ஆணையம்: ஒன்றிய அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு; கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என மக்களவையில் முழக்கம். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அரசு பரிந்துரைப்பதாக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
தி இந்து:
* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தூண், சமணர் காலத்தை சேர்ந்தது. அதேபோல் தூண்கள் மதுரையை சுற்றியுள்ள பல மலைகளில் உள்ளன. கார்த்திகை தீபம் ஏற்ற அந்த தூண்கள் பயன்படுத்தப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தி டெலிகிராப்:
* ‘இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால்’: கட்சித்தாவல் தடுப்புச் சட்ட சீர்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தில் சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், கட்டுப்பாடற்ற கட்சித் தாவல்கள் வாக்காளர்களால் வழங்கப்பட்ட ஆணையை அரித்து விடுகின்றன என்று எச்சரித்தனர்.
– குடந்தை கருணா
