கடவுள் எதற்காக… மக்களுக்காக என்கிறார்கள்? மக்களுக்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடவுள் சாலையின் குறுக்கே இருக்கலாமா?
கோயில் நகரம்தான் மதுரை… மதுரையில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் பல இடங்களில் சாலை நடுவில் தான் கோயில்கள்… இந்தத் தடையை யார் சரி செய்வது… நீதிமன்றமா, காவல்துறையா, அங்கேயும் கடவுள் இருக்கின்றார்… என்ன ஏதோ ஓர் ஓரமாக..ஆனால் சாலை முழுக்க நடுப் பாதையை மறைத்துக் கொண்டு இடையூறாக இருக்கிறதே…
உதாரணமாக மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குலமங்கலம் போக வேண்டும் என்றால் சிம்மக்கல் வந்து கோரிப்பாளையம் வந்து பீபிகுளம் வழியாகத்தான் போக வேண்டும். ஆனால் நேர்வழியாக மீனாட்சிபஜார் எல்அய்சி பாலம் செல்லூர் வழியாக செல்ல நல்ல தரமான சாலை அமைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் மணிநகரம் தண்டவாளம் அருகிலுள்ள இந்த கோயில் இடையூறாக உள்ளது.
கடவுளை மக்கள் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
யார் மணி கட்ட வேண்டியது?
– நமது செய்தியாளர்
