சென்னை, டிச.16- தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மய்யம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாகக் கடுமையான குளிர் காற்று வீசி வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் குளிரின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. இதனால் ஜில்லென்ற சீதோஷ்ணம் நிலவினாலும் மழை பெய்வது வெகுவாக குறைந்து விட்டது. ஆனாலும், இன்று (16.12.2025) முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிழக்கு திசை காற்றின் வேசு மாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பணி மூட்டம் காணப்படும்.
நாளை (17.12.2025), தமிழ்நாட்டில் ஒருசில இடங்க ளிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17 ஆம்தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 18 ஆம்தேதி தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 19, 20 ஆம்தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரி வித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளை யில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது நிலவும் பனி மூட்டம் குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘வடமாநிலங்களில் வீசக்கூடிய குளிர்காற்று முன்பாகவே கிழக்குத் திசை காற்றாக, தமிழ்நாட்டில் வடக்கு,வடகிழக்கு திசைகளில் வீசுகிறது. தற்போது தமிழ்நாட்டில் பெரிதாக மழை இல்லாததால் வானம் தெளிவாகஉள்ளது. இத னால் மேகக் கூட்டம் இல்லாமல் குளிர் காற்றின் தன்மை அதிகம் நிலப்பரப்புக்கு வருகிறது. இவ்வாறு வரக்கூடிய நாள்களில் படிப்படியாக ஈரப்பதம் அதிகரித்து குளிர்காற்றும் மூடுபனியும் தீவிரமடையும்’’ என்றனர்.
