மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதனை தமிழ்நாடு அரசும் கோவில் நிர்வாகமும் ஏற்கவில்லை அந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கீழ தெருவை சார்ந்த பிஜேபி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்மேகம் ஒரு ‘யூ டியூப்’ தளத்தில் இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்தார் அதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்துறை விசாரணை நடத்தியது. அவதூறு உள்ளிட்ட அய்ந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து. பிஜேபி பிரபாகர் கார்மேகம் கைது செய்யப் பட்டுள்ளார்.
