தமிழ் நாட்டைப் போலவே உத்தரப் பிரதேசத்திலும் பலமான எதிர்க் கட்சியான சமாஜ் வாடி கட்சி எஸ்.அய்.ஆர் நட வடிக்கையை எதிர்க்கிறது.
இருப்பினும் அது ஒரு சட்ட நடைமுறை. மக்கள் எஸ்.அய்.ஆர் விண்ணப்பத்தை கொடுக்காமல் இருந்தால் அவர்களது வாக்களிக்கும் உரிமை பறிபோகும் என்பது மட்டுமல்ல.
வாக்குரிமை பறிபோகும் – அடுத்தக் கட்டம் குடியுரிமை கேள்விக்குறியாகிவிடும்,
இதற்காக மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கட்சித் தொண்டர்களை களமிறக்கி எஸ்.அய்.ஆர் படிவத்தை நிரப்ப மக்களுக்கு உறுதுணையாக நில்லுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதே நிலைதான் உத்தரப் பிரதேசத்திலும் அகிலேஷ் தனது கட்சியினருக்கு எஸ்.அய்.ஆர் படிவம் அனைத்து வாக்காளர்களிடமும் சென்று சேர்த்து அதைப் பெற்று மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும் வரை தூங்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மீரட் தொகுதியில் உள்ள மங்காரி என்ற பகுதியில் கிராமம் கிராமாக சென்று எஸ்.அய்.ஆர் படிவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள்.
