ஈசுவரநாத் கன்ஸ்ட்ரக்சனின் நிர்வாக இயக்குநர்
எஸ்.பி.ஆத்மநாபன் (வயது 80) நேற்று 14.12.2025 மாலை 5 மணிக்கு மறைவுற்றார். இன்று (15.12.2025) மாலை 4 மணிக்கு பெரம்பூர் ஜமாலியாவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது. அவருக்கு அமிர்தவல்லி என்ற துணைவியாரும், வேழவேந்தன், கந்தவேல் ஆகிய மகன்களும், வேல்விழி, கோப்பெருந்தேவி, நூபம்மா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். மறைந்த அவரது உடலுக்கு ப.சீதாராமன், திராவிட நிதி மேலாளர் அருள்செல்வன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
மறைவு செய்தி அறிந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், ஆத்மநாபன் அவர்களின் துணைவியார் மற்றும் மகனுடன் தொலைப்பேசியின்மூலம் தொடர்பு கொண்டு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்தார்.
