15.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சங்கிகள் படையோடு வந்தாலும் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்; ஜெயித்து காண்பிப்போம் என்று திருவண்ணாமலையில் நடந்த தி.மு.க. இளைஞர் அணி சந்திப்பு நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அரசமைப்பை காப்பாற்ற வாக்குரிமையை காப்பாற்றுவோம், டில்லி பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் சபதம்.
* வாக்காளர் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் வாக்காளர்களை தேர்தலில் வாக்களிக்க விடாமல் செய்யும் முயற்சி என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பா.ஜ.க. வாக்குச் சீட்டு அடிப்படையிலான தேர்தல்களில் போட்டியிட்டால், அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள்: டில்லி பேரணியில் பிரியங்கா காந்தி
டைம்ஸ் ஆப் இந்தியா:
* வாக்குத் திருட்டு பாஜகவின் டிஎன்ஏவில் உள்ளது மோடி-ஆர்எஸ்எஸ் அரசை அகற்றுவோம்: டில்லி பேரணியில் ராகுல் காந்தி சபதம்.
– குடந்தை கருணா
