திருமருகல், டிச.15– நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், மருங்கூரில் மறைந்த வே.இராஜேந்திரனின் சகோதரரும், கழக மாவட்ட இளைஞரணி தலைவர் வி.ஆர்.அறிவுமணியின் சித்தப்பா, பெரியார் பெருந்தொண்டர் வே.கண்ணையன் (70) படத்திறப்பு நிகழ்வு 14.12.2025 இன்று மருங்கூர் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
நாகை மாவட்ட செய லாளர் ஜெ.புபேஸ்குப்தா தலைமையில் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் படத் தினை திறந்து வைத்தார். இதில் திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன், திருமருகல் ஒன்றிய தலைவர் இராச.முருகையன், ஒன்றிய செயலாளர் சு.ராஜ்மோகன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு.குட்டிமணி, ஒன்றிய விவசாயத் தொழிலாளரணி தலைவர் காமராஜ், கழகத் தோழர் முனுசாமி, மருங்கூர் மாணவர் கழக இளமாறன், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் துளசி.செல்வந்திரன் மற்றும் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும், மறைந்த கண்ணையன் அவர்களின் இணையர் ஆமோதலநாயகி, மகள்கள் சவுந்தரியா, சவுமியா, மருமகன்கள் லெனின், பிரபாகரன் உள்ளிட்ட குடும்பத்தினரும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
