திருநெல்வேலி,டிச.15– வாழ்வியல் சிந்தனைகள் பாகம் – 19, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு சிந்தனைகள் – உலகம் கண்டதுண்டா இப்படி யோர் இயக்கத்தை? நூல்களை திமுக வர்த் தகர் அணி மாநில துணைச் செயலாளர் ந.மாலை ராசா வெளியிட்டு சிறப்பு ரையாற்றினார்.
நேற்று (14.12.2025) காலை 10 மணிக்கு திருநெல்வேலி- தச்சநல்லூர் பெரியார் மய்யத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழா, நூல்கள் வெளியீடு மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமை வகித்தார்
மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் வரவேற் புரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர் இரா.காசி, பொதுக்குழு உறுப் பினர் ந.குணசீலன், மாவட்ட மகளிரணித் தலைவர் இரா.பானுமதி, மாவட்ட ப.க.தலைவர் செ. சந்திரசேகரன், செயலாளர் கு.திருமாவளவன், மாவட்ட துணைச்செயலா ளர் மாரி.கணேசு,மாவட்ட இளைஞரணித் தலைவர் உ.வீரபாண்டிய கட்ட பொம்மன், மாவட்ட மாணவர் கழகத்தலைவர் செ.சூர்யா, மாநகர செயலாளர் வெயிலுமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவு ரையாற்றினார். திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் ஆரூர்.தேவ.நர்மதா தமிழர் தலைவர் அவர்களின் அருந் தொண்டினை விளக்கி எழுச்சியுரை யாற்றினார்.
மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் ,திமுக வர்த்தகரணி மாநில துணைச் செயலாளர் .ந.மாலைராசா தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் பாகம் -19, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு சிந்தனைகள் -உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக் கத்தை? என்ற தலைப் பிலான இரண்டு புத்தகங் களை வெளியிட்டு சிறப்பு ரையாற்றினார்.
தமது சார்பில் 40 புத்தகங்களை பெற்றுக் கொண்டதுடன் விடுத லைக்கு ஓராண்டு விடு தலை சந்தா வழங்கினார்.
வழக்குரைஞர்கள் சிலம்பரசன், செந்தூர்பாண்டியன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டு கருத் துரையாற்றினார்கள்.
மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். திருநெல்வேலி மாநகர மாணவர் கழக தலைவர் பாரத் நன்றியுரையுடன் பெருமகிழ்ச்சியுடன் விழா நிறைவுபெற்றது.
