மியான்மர், டிச. 15– மியான்மர் எல்லை வழியாக இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்குள் போதைப் பொருட்கள் குவிந்து வருகின்றது. இது இந்தியாவின் தேசிய சமூக பாதுகாப்புக்கு பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
போதைப் பொருட்கள்
அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்த போது உலகின் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஹெராயின் உற்பத்தி செய்யப் படும் இடமாக இருந்தது. தலிபான்களிடம் அந்நாட்டின் ஆட்சியை கொடுத்தபிறகு 2022 ஏப்ரல் மாதம் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் கசகசா (Poppy) சாகுபடிக்கு தலிபான் அரசு தடை விதித்தது.இது உலகளாவிய போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் சங்கிலியில் ஒரு இடைவெளியை உருவாக்கியது. இதனை மீண்டும் சரி செய்வதற்காக மியான்மரில் நடை பெறும் உள்நாட்டுப் போர்ச் சூழலை பல போதைப்பொருள் கும்பல்கள் பயன்படுத்தத் துவங்கியுள்ளன.
வடகிழக்கு மியான்மர், வடக்கு தாய்லாந்து, வடக்கு லாவோஸ் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்தப் பகுதி, வரலாற்று ரீதியாகவே உலகின் மிகப்பெரிய கசகசா உற்பத்திப் பகுதிகளில் ஒன்றாகும். இது தங்க முக்கோ ணம் (golden triangel) என அழைக்கப்படும். 1990கள் மற்றும் 2000களில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தாய்லாந்து கடும் நட வடிக்கைகளை எடுத்தபோது, போதைப்பொருள் கும்பல்கள் தங்கள் நடவடிக்கைகளை மியான்மரின் ஷான் மாநிலத்திற்கு மாற்றின.
ஹெராயின் பொருளாதாரத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த ‘அய்க்கிய வா அரசு ராணுவம்’ (United Wa State Army) போன்ற பல கும்பல்கள் தற்போது மியான்மரில் கசகசா சாகுபடியை முன்பை விட மேலும் தீவிரமாக அதிகரித்து வருகின்றன.
2021க்குப் பிறகு, மியான்மரில் மெத் (Meth) என்ற போதைப்பொருள் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது. அரசு நிர்வாகம் பலவீனமடைந்தது, ஊழல் மற்றும் ஆயுத அமைப்புக ளின் நிதித் தேவைகள் ஆகியவை சட்டவிரோத உற்பத்திக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி யுள்ளன. குறிப்பாக உலகளவில் மெத்தாம்ஃபெ டமின் என்ற போதைப்பொருள் உற்பத்தியில் மியான்மர் தற்போது முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. அங்கு பெரிய நவீன ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை இந்திய -மியான்மர் எல்லை வழியாக வடகிழக்கு மாநிலங்களுக்குள் கொண்டு செல்லப்பட்டு பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு கடத்தப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
