பெரியாரும் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியாரும், அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்ற தலைப்பில் புத்தக காட்சியில் பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த ஒரு இளைஞரின் கருத்து Periyar Vision OTT –இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரியாரை புரிந்தவனுக்கு அவர் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. புரியாதவனுக்கு அவர் கடவுள் மறுப்பாளர் கடவுள் இல்லை என்று மட்டுமே சொன்னவர் என்ற தவறான புரிதல் உள்ளது. பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகுதான் பெரியார் சிலைகளை உடைக்க ஆரம்பித்தார்கள். பெரியார் இறந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகியும் ஏன் உடைக்கிறார்கள் என்று மக்கள் சிந்தித்த பிறகுதான் நிறைய படிக்க ஆரம்பித்தார்கள். புத்தக காட்சியில் அமைக்கப்பட்டுள்ள புத்தக ஸ்டால்களில் பெரியார், அம்பேத்கர் புத்தகங்கள் தான் இன்று அதிகமாக விற்பனையாகிறது. ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் பெரியாரும், அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று அடிக்கடி குறிப்பிடுவார். அது உண்மைதான். அம்பேத்கர் பெரியாரை தலைவர் என்பார். பெரியாரும் எனக்கு ஒருவர் தலைவர் என்று இருந்தால் அது அம்பேத்காராகத்தான் இருக்க முடியும் என்று சொல்லுவார். இவர்களைப் பற்றிய விழிப்புணர்வு வெளிச்சமாக பரவ ஆரம்பித்தது. ஆரிய, பிராமணத்தால் கடவுளை முன் வைத்து மக்களை முட்டாளாக்க முயன்றால்தான் கடவுள் இல்லை….

கடவுள் மறுப்பு பரவ ஆரம்பித்தது. இன்று மக்கள் பெரியார், அம்பேத்கர் பற்றிய சிறு புத்தகங்களையாவது வாங்கி படித்து விழிப்புணர்வு மற்றும் புரிதல் பெற்று வருகிறார்கள் என்பது மிகச் சிறந்த விசயம். இவ்வாறு தொடர்ந்து வாசகர் பேசியதை இன்றே காணுங்கள்

– K சந்திரசேகரன்

திருவெறும்பூர்

 

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!          இணைப்பு :  periyarvision.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *