சென்னை, டிச.14 தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலம் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம். எஸ்.அய்.ஆர். பணிகளின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் வலுவாக எதிர்த்தது திமுகதான். டிச.19ம் தேதிக்கு பிறகு எஸ்அய்ஆர் பணிகள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும். தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம்.
வாக்குச்சாவடி மய்யங்களை அதிகரித்தது எப்படி? அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அமித் ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக 8 முறை பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தும் எதுவும் எடுபடவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் 202 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் சூழல் உள்ளது என்று கூறினார்.
இந்தியாவில் பொருளாதாரத்தில் உயர்ந்த மாநில வரிசை
இந்திய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் மாநிலங்கள் யாவை?
ஜிஎஸ்டிபி அடிப்படையில் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மகாராட்டிரா மாநிலம்.
தேசிய ஜிடிபியில் 13.30 சதவீத பங்களிப்பை தருகிறது. இதன் ஜிஎஸ்டிபி 42.67 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. மேலும், தனிநபர் வருமானம் 2. 89 லட்சம் ரூபாயாக இருக்கிறது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.
தேசிய ஜிடிபிக்கு 8.90 சதவீத பங்களிப்பை தருகிறது. இங்கே ஜிஎஸ்டிபி 31.55 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் ஆண்டு நிலவரப்படி தனிநபர் வருமானம் 3.5 லட்சங்களாக இருக்கிறது.
அடுத்ததாக கருநாடக மாநிலம் 8.20 சதவீத ஜிடிபி பங்களிப்புடன் இருக்கிறது. இந்த மாநிலத்தின் ஜிஎஸ்டிபி என்பது 28.09 லட்சம் கோடிகள் ஆகும்.
அதேபோல், கருநாடகாவில் தனிநபர் வருமானம் 3.31 லட்சம் ரூபாயாக இருக்கிறது.
