நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவு நாள் இன்று (14.12.1959)

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்நாள் – அந்நாள்

இன்று நாவலர் சோமசுந்தர பாரதியார்  நினைவு நாள் (14.12.1959).

தாய்மொழிக் காவலராக வும் ஹிந்தி எதிர்ப்புப் போர் வீரராகவும் திகழ்ந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் தமிழ் மொழியின் மேன்மைக்காகவும், பொதுவெளியில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து போராடிய ஓர் அரிய தமிழறிஞர் ஆவார்.

பொதுவெளிகளில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தஞ்சை மாநாட்டுத் தீர்மானம் (1918): சென்னை மாகாணச் சங்கத்தின் சார்பில் 1918 ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற மாநாட்டில், நாவலர் பாரதியார் முன்னிலையில் ஒரு முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் சாரம்: பொதுக் கூட்டங்களில் தமிழர்கள் தாய்மொழியிலேயே பேசுதல் வேண்டும்; அயல்மொழியில் பேசுதல் கூடாது. மேலும், எவரேனும் அயல்மொழியில் பேசினால், அவரைத் திருத்தும் பொறுப்பை பொது மக்களே ஏற்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தத் தீர்மானம், அக்காலகட்டத்திலேயே தமிழர்கள் பொதுவெளிகளில் தங்கள் தாய்மொழியைப் பயன்படுத்தாமல் அயல்மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையைத் தெளிவுபடுத்துகிறது. பாரதியார் மூலம் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் வழியே, அவர் பொதுக்கூட்ட மேடைகளில் தமிழ் ஒலிக்கச் செய்தார் என்பது உறுதிப்படுகிறது.

ஹிந்தித் திணிப்பிற்கு எதிரான வீர முழக்கம்

ஹிந்திக் கட்டாயப் பாடம் (1937): 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த இராசகோபாலாச்சாரியார், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ஹிந்தி மொழியைக் கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தார்.

இந்த முடிவை தமிழ்நாடு முழுவதும் எதிர்த்த நிலையில், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஹிந்தி எதிர்ப்பு மாநாடுகள் அனைத்திலும் பங்கேற்றுத் தீவிரமாக முழங்கினார்.

சென்னை மாநாட்டுத் தலைமை (1937): அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு அவரே தலைமை தாங்கினார்.

முக்கியத் தீர்மானம்: அம்மாநாட்டில், “ஹிந்தி மொழியைப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக வைப்பது, தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழர் நாகரிகத்திற்கும் கேடு செய்யும்” என்று தீர்மானம் நிறைவேற்றச் செய்தார். அத்துடன், சட்டமன்றம், நீதிமன்றங்கள், மற்றும் அனைத்து அரசியல் அலுவலகங்களிலும் தாய்மொழியாகிய தமிழ் மொழியிலேயே அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுதல் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நாவலர் சோமசுந்தர பாரதியார் வெறும் கல்வியாளர் மட்டுமல்ல; அவர் தமிழின் பயன்பாட்டுத் தளத்தை விரிவாக்கவும், அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களில் இருந்து தமிழ் மொழியைக் காக்கவும் துணிவுடன் களமிறங்கிய போர்க்குணமிக்கத் தமிழ்த்தொண்டராவார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *