சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது ‘இம்பீச்மெண்ட்’ கொண்டு வருவதற்கு 120-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, நாடாளுமன்ற மக்களவைத் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ள தாக்கீது – இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பதறிப் போயிருக்கும் பார்ப்பனர்கள் நாள்தோறும் ஊடகங்களில் புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று முன் தினம் 56 மேனாள் நீதிபதிகள் பெயரால் ஓர் அறிக்கை வெளிவந்திருக்கிறது! ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருந்து, யாரெல்லாம் அடுத்தடுத்த பதவிகளுக்குக் காத்திருப்போர் என்ற பட்டியல் வேண்டுமென்றால், இந்தப் பட்டியலைப் பார்க்கலாம். இதில் 53 பேர் வெவ்வேறு மாநிலங்களிலும், ஓரிருவர் உச்சநீதிமன்றத்திலும் பணியாற்றியோர்.
அவர்களுக்கெல்லாம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் உண்டா? ஒரே பெஞ்சில் அமர்ந்து தீர்ப்பு தந்தவர்களா? அவரது தீர்ப்புகளை வாசித்திருப்பார்களா? அவரது வழக்கின் மேல்முறையீட்டில் தீர்ப்பு சொல்லியிருப்பார்களா? ஸநாதனத்தைப் பின்பற்றும் ஓர் அக்மார்க் அமெரிக்க அக்கிரகாரவாசியையும், அவரது அண்ணனையும் விபத்து – கொலை வழக்கிலிருந்து தப்ப வைத்ததை அறிவார்களா? நீதிபதி வீட்டிலிருந்துவந்தபரிந்துரை பார்ப்பன நடிகையைச் சிறையிலிருந்து தப்ப வைத்ததை அறிவார்களா? மற்ற நீதிபதிகளுக்கும் அவர்களது வீட்டிலிருந்து பரிந்துரை தொடர்ந்தால் ஏற்பார்களா?
‘‘அதெல்லாம் எதுக்கு ஓய்? ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செஞ்சா ஒத்துக்க வேண்டியதுதானே!’’
அவா! எவா?
– பார்வையாளன்
