செய்திகள்
தீண்டாமையை ஒழிக்க போராடிய சாவர்க்கர்: அமித்ஷா
நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்து மதத்தில் இருந்த தீமைகளை அகற்ற அவர் போராடியதாகவும், இந்தியாவின் விடுதலை மற்றும் எதிர்காலம் குறித்து அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருந்ததாகவும் அமித்ஷா கூறியுள்ளார். மேலும், அந்தமானில் சாவர்க்கர் அடைக்கப்பட்ட சிறை, தேசிய ‘புனித’ தளமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தோஷங்கள் நீக்கும் சூரியனார் கோயில்!
நவகிரக தலங்களிலேயே அனைத்து நவகிரகங்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ள ஒரே கோயில், சூரியனார் கோயில். தஞ்சாவூரின் ஆடுதுறை அருகே அமைந்துள்ள இக்கோயிலில் சூரியபகவான் 2 மனைவியுடன் காட்சி தருகிறார். இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. பக்தர்கள் தங்களின் தோஷங்கள் விலக வஸ்திரம், தானியங்கள், நகைகள், மலர்கள் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர்.
ரூ.10,000 தந்தாலும் முஸ்லிம்களின்
ஓட்டு கிடைக்காது: அசாம் முதலமைச்சர்
அரசின் நலத்திட்டங்களை விட, சித்தாந்தங்களே வாக்களிப்பதை உறுதி செய்வதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார். ரூ.10,000 கொடுத்தாலும் முஸ்லிம்கள் ஒருபோதும் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாஜகவுக்கு சிறுபான்மையினரின் ஆதரவு இல்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேசி வரும் நிலையில், பாஜக ஆளும் அசாம் முதலமைச்சரின் இந்த பேச்சு விவாதத்தை எழுப்பியுள்ளது.
சிந்தனைகள்
‘ஹிந்துத்துவா’என்ற ஒன்றை உருவாக்கியவர் சாவர்க்கர். ஜாதி இல்லை என்று சொல்கிறவன் இந்துவாக இருக்க முடியாது என்கிறது. முல்லாவால் எழுதப்பட்ட ‘இந்து சட்டம்’என்ற நூல். ஜாதியின் விளைவே தீண்டாமை அதனால்தான்தீண்டாமை ேக்ஷமகரமானது என்றார் காஞ்சி சங்கராச்சாரியார். இந்த நிலையில் ‘ஹிந்துத்துவா’ என்ற ஒரு கருத்தின் பிதாவாக சாவர்க்கர் தீண்டாமையை ஒழிக்கப் போராடியவர் என்று அமித்ஷா கூறியது சுத்த கப்சா!
அது என்ன தோஷங்கள்? தோஷம் என்பது கிரகங்களின் (கோள்களின்)நிலை காரணமாக உருவாகும் எதிர்மறை விளைவு என்கிறார்கள். இவர்கள் கூறும் நவகிரகங்களில் உண்மையான ‘பூமி ’ என்ற கோளுக்கு இடம் இல்லை. ஆனால், நட்சத்திரமான சூரியனை கிரகத்தின் பட்டியலில் வைத்துள்ளனர். வயிறு வலிக்க சிரிக்கலாம் அல்லவா!
சிறீரங்கம் கோயிலில் துலுக்கநாச்சியார் சன்னதியை உடைத்தெறிய எப்போது உத்தேசம்? ஒரு முதலமைச்சராக இருக்கக்கூடியவர் சிறுபான்மையினர்மீது இவ்வளவுத் துவேஷ நஞ்சைக் கக்குகிறார் என்றால்– அவர் சார்ந்திருக்கும் பிஜேபியின் தரா தரத்தை என்ன சொல்ல!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை (Preamble) மதச்சார்பின்மையை (Secularism)வலியுறுத்துகிறது. அதன்மீது உறுதிமொழி எடுத்துதானே முதலமைச்சர் பதவியை ஏற்றார் இவர்.ஏனிந்த இரட்டை வேடம்?
