சென்னை, டிச. 14– தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்இ) நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த இடங்களுடன் கூடுதலாக 1,372 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 12 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதன் மூலம், குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ள மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேர்வர்கள் இந்த அறிவிப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
