பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
தேசிய மாணவர் படை, பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் இணைந்து நடத்திய
பாலின சமத்துவ, திறன் வளர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
தஞ்சாவூர், டிச.. 14– தஞ்சாவூர் மாவட்டம் பெரியார் புரா திட்ட கிராமமான இராயமுண்டான்பட்டியில் தேசிய மாணவர் படையின் மூன்று பெரும் அலகுகளின் மாணவர்களும் இணைந்து 1000 பனை விதை நடும் பெரும் திட் டத்தை நிரைவேற்றினார்கள்.
பனைவிதை நடும் பணிக்கு பெரியார் மணியம்மை அறிவி யல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்தின் பதிவாளர் பேரா முனைவர் பி.கே.சிறீவித்யா தலைமை வகித்தார்கள். தேசிய மாணவர் படையின் பெண்கள் பிரிவின் கமாண்டிங் அலுவலர் மேஜர் எம்.மினி தொடங்கி வைத்து பனை விதைகளை விதைத்தார்கள். தஞ்சாவூர் கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவர் மருத்துவர் ராதிகா மைக்கேல் பங்கேற்று மாணவர் படையினரை வாழ்த்தி சிறப்பித் தார்கள்.
காவிரியின் நீட்டிப்புக் கால்வாயான உய்யக்குண்டான் கரையில் இராயமுண்டான்பட்டி-நவலூர் இடையே 2 கி.மீ.தொலை விற்கு பனைவிதை நடப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து மேஜர் மினி தலைமையில் கிராமத்திற்குள் அணிவகுத்து சென்ற தேசிய மாணவர் படை மாணவர்கள், அங்கிருந்து அரசினர் உயர் நிலைப் பள்ளியின் வளாக எல்லைகளில் பனைவிதையை விதைத்தனர். அரசுப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கிராமப் பொதுமக்களும் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய மாணவர் படை மாணவர்கள் பாலின சமத்துவம் மற்றும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்த வீதி நாடகங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தேசிய மாணவர் படையின் பெண்கள் பிரிவு கமாண்டர் மேஜர் மினி தேசிய மாணவர் படையின் முக்கியத்துவம் குறித்தும், அது ஆற்றிவரும் சேவைகள் குறித்தும், மாணவர்கள் அனைவரும் அதில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்றும் விரிவாக எடுத்துக் கூறினார். முன்னதாக தேசிய அளவில் சாதனை படைத்த தேசிய மாணவர் படை மாணவர்களை அறிமுகம் செய்து பரிசளித்து பாராட்டினார். கூடியிருந்த பொதுமக்களிடம் சுற்றுச் சூழலை காப்பதும் தூய்மையை பராமரிப்பதும், குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை விளக்கி அவர்களிடம் பிரசுரங்களை விநியோகித்தனர்.
தேசிய மாணவர் படையின் இணை அலுவலர் மேஜர் பேரா முனைவர் பி.விஜயலெட்சுமியும், கேப்டன் பேரா ப.சரவண குமாரும் மாணவர் படையினரை ஒருங்கிணைத்து பள்ளி மாணவர் களிடம் விழிப்புணர்வுக் கருத்து களை பகிர்ந்தார்கள்.
பனைவிதை விதைப்பு நிகழ்வில் பெரியார் புரா ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ஆனந்த் ஜெரார்டு சமூக பணித்துறை மாணவர்களுடன் பங்கேற்று சிறப்பித்தார். இராய முண்டான்பட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் விழிப் புணர்வு முகாம் மற்றும் பனைவிதை விதைப்பு நிகழ்வு களை பெரியார் புரா திட்ட பேராசிரியர் முனைவர் வெ.சுகுமாரன் ஒருங்கிணைத்தார். இராயமுண்டான்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை யாசிரியர் சாந்தி தேசிய மாணவர் படை அலுவலர் மேஜர் எம்.மினிக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார். பேராசிரியர் முனைவர் வெ.சுகுமாரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சி. பாஸ்கர் நூல்களை வழங்கி சிறப்பு செய்தார்கள்.
தேசிய மாணவர் படை தொடர்ந்து அந்த ஊரில் சேவைப் பணிகளையும், விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்துவது என தீர்மானித்துள்ளது. அந்த கிராம இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் சுயதொழில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு பணிகளை மேற் கொண்டிடவும், ஆண், பெண் சமத்துவத்தை நிலை நிறுத்தவும் உறுதியேற்றனர்.
பெரியாரின் கிராமப்புற மேம்பாடு குறித்த கனவினை நிறை வேற்றிடும் வகையில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தேசிய மாணவர் படை இந்த சமூக மேம்பாட்டு திட்டத்தை பெரியார் புரா கிராமங்களில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. பெரியார் நிறுவனங்களின் வேந்தர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் இதயத் துடிப்பாய் திகழும் பெரியார் புரா திட்டம் கிராமப்புற மக்களை ஆற்றல் படுத்தும் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுத்தி வருகிறது.
