14.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* திருப்பரங்குன்றம் தீப வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இருந்து வேறு ஒரு நீதிபதிக்கு மாற்றுவதே சரியாக இருக்கும், மேனாள் நீதியரசர் அரி.பரந்தாமன் கருத்து.
* 100 நாள் வேலை திட்டத்துக்கு ஏன் பெயர் மாற்றம்? மகாத்மா காந்தி என்ற பெயரில் என்ன தவறு இருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை ஏன் ‘பூஜ்ய பாபு வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ என்று பெயர் மாற்ற வேண்டும்?’ அவர்கள் வெறுக்கிறார்கள். இப்போது அவர்கள் காந்தியையும் வெறுப்பது தெரிகிறது, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
* மகாராட்டிரா, குஜராத்தை பின்னுக்கு தள்ளி பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* கேரள உள்ளாட்சித் தேர்தல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி: ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு பின்னடைவு,
* எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு: ஹிந்தி வழிக் கல்வியை அறிமுகப்படுத்திய மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் மாணவர்களிடம் ஆர்வம் இல்லை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மனித வளம் 2047-க்குள் தமிழ்நாட்டை 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற உதவும்: வர்த்தக உச்சி மாநாடு (UEF) 2025இன் போது ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கிமயமாக்கல் காலகட்டத்தில் மனித வளமே தீர்க்கமான வளர்ச்சி உந்துசக்தியாக இருக்கும் என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் பேச்சு.
தி இந்து:
* பீகாரில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000 தொகையும் ஆண்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக ஆர்ஜேடி குற்றச்சாட்டு: முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்குப் பணம் செலுத்துவதற்கு பதிலாக, பீகார் அரசாங்கம் பல ஆண்களின் கணக்குகளுக்கு ரூ.10,000அய் மாற்றியுள்ளதாக எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) குற்றம் சாட்டியுள்ளது.
தி டெலிகிராப்:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு – கண் துடைப்பா? ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும். “பதிலளிப் பவர்கள் தங்கள் ஜாதி விவரங்களை வெளியிட வேண்டாம் என்று தேர்வு செய்யலாம்,” என்று தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
– குடந்தை கருணா
