திருச்சி, டிச.14– விமா னத்தில் மயங்கி விழுந்த பெண்ணின் உயிரை காப் பாற்றிய மருத்துவர்கள் க.இளவரசன், ச.கவுதம் ஆகியோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
கடந்த நவ.22 ஆம் தேதி டில்லியிலிருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானத்தில் இளம் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்பெண் விமானத்தின் கழிவறைக்குச் சென்ற பொழுது திடீரென அவர் மயங்கி விழுந்துவிட்டார். விமானப் பணிப் பெண்கள் அவரை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க முயன்றனர். அந்த முயற்சி பலனளிக்காததால் விமானத்தில் யாராவது மருத்துவர்கள் பயணிக்கிறீர்களா என்று கேட்டனர். அப்போது விமானத்தில் பயணித்த எம்.டி.சித்தா படிப்பை நிறைவு செய்த மருத்துவர் க.இளவரசன் மற்றும் இளநிலை சித்த மருத்துவர் ச.கவுதம் ஆகிய இருவரும் உடனடியாக வர்ம சிகிச்சை அளித்து அந்தப் பெண்ணை மயக்க நிலையிலிருந்து மீட்டனர். மருத்துவர்களின் இந்த செயலுக்கு விமானத்தில் பயணம் செய்தவர்களும் விமான சேவை நிறுவனத்தினரும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். அலோபதி மருத்துவத்தைப் போல சித்த வர்ம சிகிச்சைகளும் அசாதாரண சூழல்களில் உயிர் காக்கக் கூடிய ஒன்றாக இருப்பதாக சித்த மருத்துவர்கள் தெரி வித்தனர்.
மருத்துவர்கள் க.இளவ ரசன், ச.கவுதம் ஆகிய இரு வரது செயல்களையும் ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்ய ராஜேஷ் கோட் டேச்சா நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரி வித்தார்.
இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற (டிச.12) உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன், செயலர் மரு.செந் தில்குமார் மற்றும் மாநகர மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். அந் நிகழ்ச்சியில் விமானத்தில் பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு சிகிச்சை அளித் துக் காப்பாற்றிய சித்த மருத்துவர்கள் க.இளவர சன் மற்றும் ச.கவுதம் ஆகியோரைப் பாராட்டி சிறப்பித்தனர்.
இதில் மருத்துவர் இளவரசன் திருச்சி பெல் ம.ஆறுமுகத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
