நூல்கள் அறிமுக விழா! பெரியார் உலகத்திற்கு ரூ.25 இலட்சம்
திருவண்ணாமலை மாவட்ட கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு!
போளூர், டிச. 14– திருவண்ணாமலை மாவட்ட கலந்துறவாடல் கூட்டம் 13.12.2025 அன்று காலை 11மணிக்கு மாறன் மினி அரங்கத்தில் உற்சாக மாக நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் சி.மூர்த்தி தலைமை தாங்கினார். பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேலு மறைவுக்கு இரங்கல் தெரி விக்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டக்கழகம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93-ஆவது பிறந்தநாள் விழா!, வாழ்வியல் சிந்தனைகள் பாகம்-19, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு சிந்தனைகள், உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை? இரண்டு நூல்கள் அறிமுக விழா கூட்டம் 21.12.2025 அன்று போளூரில் நடத்து வது எனவும்,
பெரியார் உலகத்திற்கு ரூ.25 இலட்சம் நிதி திரட்டி அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
மாவட்டச்செயலாளர் மு.க.இராம்குமார், பொதுக்குழு உறுப்பினர் ப.அண்ணாதாசன், பெரியார் பெருந்தொண் டர்கள் முனு.சானகி ராமன், மு.காமராசு, தா.சுந்தரமூர்த்தி, நகரசெயலாளர் தேவராசு, மாவட்ட ப.க.தலைவர் வெங்கட்ராமன், மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர். க.சங்கர், செயலாளர் மு.சபரி, ப.க.எம்.அரங்கநாதன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை கே.எம்.இராசேந்திரன் பி.இராமு தஞ்சை அ.உதயபிரகாசு ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். மாறன் மினி அரங்க உரிமையாளர் இள.செழியன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
