கொல்கத்தா, மே 3- மேற்கு வங்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதன் 2ஆவது ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு முதலமைச்சர் மம்தா காட்சிப்பதிவு செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், மனதின் குரல் என்ற பெயரில் பெயரில் பிரதமர் மோடி பேசுவது அனைத்தும் பொய்யின் குரல். ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பும் பல வாக்குறுதிகளை பாஜ அளிக்கும். தேர்தலுக்கு பிறகு அதை மறந்துவிடும். பாஜவை தோற்கடிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. நாடு முழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டணி சேர வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் பாஜக தோற்பது உறுதி என்றார்.