குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினருக்கும், நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் திராவிடர் இயக்கம் சார்ந்த போட்டிகள் நடத்துவதில் ஆர்வமுடைய தோழர்கள் 9940489230 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- கழகத்தின் எந்த அணியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.
- தோழர்களை ஒருங்கிணைத்து, போட்டிகளை முறைப்படி அறிவித்து, பலரையும் பங்கேற்கச் செய்து நடத்துவதில் ஆர்வமுடையவர்களாக இருக்க வேண்டும்.
- போட்டிகள் நடத்துவதில் முன்னனுபவம் இருப்பின் கூடுதல் சிறப்பு. இல்லையெனினும் இனி அனுபவம் பெறலாம்.
- போட்டிகளுக்குப் பரிசுகள் வழங்க விரும்புவோரும் தொடர்பு கொள்ளலாம்.
– ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,
துணைப் பொதுச் செயலாளர்,
திராவிடர் கழகம்
