டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* 73 ஆண்டாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தான் தீபம் ஏற்றம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூணல்ல; சர்வே தூண்: உயர்நீதிமன்றம் கிளையில் அரசு தலைமை வழக்குரைஞர் வாதம்.
* பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உரிமை தொகை ரூ.1000இல் இருந்து மேலும் உயரும்: வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மதுரை அருகே திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றும் விவகாரத்தை மக்களவையில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் நேற்று (12.12.2025) எழுப்பி பேசினார். அப்போது தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகவும், திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு மக்களவையில் இருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
* யு.ஜி.சி., ஏ.அய்.சி.டி.இ., என்.சி.டி.இ. என்ற அனைத்து அமைப்புகளையும் ஒரே அமைப்பாக கொண்டுவர ஒன்றிய கல்வித்துறை முடிவு.
* வாக்கு திருட்டு குறித்து காங்கிரஸ் நடத்தும் பேரணியில் தெலங்கானா அமைச்சர்கள் கலந்து கொள்வர்.
தி இந்து:
* பாஜக ஆட்சியில் ஆலந்து வாக்காளர் மோசடி வழக்கில் மேனாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குட்டேதார், மகன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். இந்த மோசடியில், ஆலந்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 6,000 வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்காக படிவங்களைத் போலியாக தயாரித்தது அடங்கும்.
* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மொத்த மதிப்பு கூட்டல் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கு அய்எம்எஃப் ‘சி’ தரத்தை வழங்கியுள்ளது, இது இரண்டாவது மிகக் குறைந்த தரமாகும். இது குறித்து ஊடகங்கள் மவுனம் சாதிப்பதை கண்டித்துள்ளார் கரண் தாப்பர்
தி டெலிகிராப்:
* வாக்கெடுப்பு முரண்பாடுகள், சிசிடிவி அணுகலை கட்டுப்படுத்துதல் மற்றும் வாக்காளர் பட்டியல் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் செய்து வருவதை எதிர்த்து காங்கிரஸ் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ராகுல் உரையின் போது பாஜக தலைவர் குடிபோதையில் இருந்ததாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு: ‘தேர்தல் சீர்திருத்தங்கள்’ குறித்த விவாதத்தின் போது ராகுல் காந்தியின் உரையை தொந்தரவு செய்ய முயன்றபோது பாஜக மூத்த உறுப்பினர் ஒருவர் மக்களவைக்கு “குடிபோதையில்” வந்ததாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுக்தியோ பகத் குற்றம் சாட்டினார்.
– குடந்தை கருணா
