வல்லம், டிச. 13- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்படும் Entrepreneurship and Management Development Programme(EMDP), Institute Innovation Council(IIC), Institution of Engineers (India) (IE(I)), Indian Society for Technical Education(ISTE) ஆகிய அமைப்புகள் இணைந்து, 12.12.2025 அன்று Robotics & Automation என்ற தலைப்பில் ECE, EEE, CT, Mech. ஆகிய துறையைச் சார்ந்த 150 மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி பட்டறை யில் TRANSEN DYNAMICS – CEO, Dr. Kennithraj Anbu, AI & Robotics Specialist பயிற்சி வல்லுனராக கலந்து கொண்டு Robotics & Automation துறையில் மிக நுண்ணிய தொழில் நுட்பங்களை விரிவாக எடுத்துரைத்தோடு மட்டுமல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் இந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்கள் தொழில் முனைவோர்களாக தங்களை மேம்படுத்தி கொண்டு பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி சமுதாய முன்னேற்றத்திற்கு தங்கள் பங்களிப்பை முன்னெடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகை யில் விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும் அவர் Cobot Robot-இன் Hardware பகுதிகளையும், Software மூலம் கட்டுபட்டு இயங்கும் விதத்தையும் மாணவர்களுக்கு தெளிவாக புரியும்படி செயல்முறைகளின் மூலம் மிக எளிமையாக எடுத்து ரைத்தார். மாணவர்கள் ஆர்வத்துடன் உள்வாங் கிக் கொண்டு ஒவ்வொரு வரும் Cobot Robot அய் இயக்கி பார்த்தும் மகிழ்ச்சி யடைந்தார்கள்.
மாணவ, மாணவி யர்கள் இந்நிகழ்ச்சியில் பகிரப்பெற்ற ரோபோ டிக்ஸ் & ஆட்டோமேஷன் துறையின் முக்கிய அம்சங் களைப் பற்றியும் மற்றும் தொழில் முனைவோராக தங்களை மேம்படுத்திக் கொள்ள ஆக்கப்பூர்வமான தங்கள் கருத்துகளை ஆர்வத்துடன் பதிவு செய்தனர்.
இந்நிகழ்வின் முன்ன தாக இக்கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளி யங்கிரி வரவேற்புரை நிகழ்த்தினார். துணை முதல்வர் முனைவர் க.ரோஜா டாக்டர் கெனித்ராஜ் அன்பு
ரோபோடிக்ஸ் துறையில் புரிந்த சாதனைகளைப் பற்றியும், ஒரு வெற்றி பெற்ற தொழில் முனைவோராக அவர் கடந்து வந்த பாதைகளைப் பற்றியும் என்று விரிவாக அறிமுகயுரையாற்றினார்.
மேலும் இக்கல்லூரி யின் முதன்மையர் ஜீ.ராஜாராமன் நன்றி யுரை வழங்கும் போது மாணவர்கள் டாக்டர் கெனித்ராஜ் அனுபவங் களையும், சாதனைகளை யும் மாணவர்கள் முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண் டும் என்று அவர் குறிப்பிட் டார். இந்நிகழ்ச்சியினை இஎம்டிபி (EMDP) துறை யைச் சார்ந்த ஆர்.நடராஜன் மற்றும் கே.கோபி சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.
