காரைக்குடி, டிச. 13- காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 10.12.2025 அன்று மாலை குறள் அரங்கில் மாவட்டத் தலைவர் வைகறை தலைமையில் நடைபெற்றது.
மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்டச் செயலாளர் சி. செல்வமணி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங் கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று கருத்துரை வழங்கினார்.
வழங்கப்பட்ட பெரியார் உலக நிதியில் மாவட்டக் கழகத் தோழர்களின் பங்களிப்பு பாதிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
மழைக் காலத்திலும் சிறப்பாக விழா நடத்த ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தோழர் களுக்கும் நன்றி பாராட்டி பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெரியார் பிஞ்சு இதழுக்கு 50 சந்தாக்கள் திரட்ட முடிவு செய்யப்பட்டது.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் இரா. முத்து லட்சுமி ஓராண்டு சந்தா வழங்கினார். கழகப் பேச்சாளர் தி.பிராட்லா 5 சந்தாக்கள் வழங்குவதாக தெரிவித்தார்.
தமிழர் தலைவர் 93வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ‘உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக் கத்தை?’ நூலின் நூல் அறிமுகம் மற்றும் பரப் புரைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. காரைக்குடி மாநகர துணைச் செயலாளராக சி. சூரியமூர்த்தி நியமிக்கப் பட்டார்.
பகுத்தறிவாளர் கழக ஆலோசகர் சு. முழுமதி, மாவட்ட துணைச் செயலாளர் இ.ப. பழனிவேல், கழகப் பேச்சாளர் தி. என்னாரெசு பிராட்லா, மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன், மாநகர துணைத் தலைவர் ஆ. பழனிவேல் ராசன், இரா. முத்துலட்சுமி, வீ. முருகப்பன், த. திருமேனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
பெரியார் உலக நிதியாக ரூ.11,78,248.00 தொகை வழங்கிய மாவட்டத் தோழர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக் கப்படுகின்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யாவின் 93ஆவது பிறந்தநாள் விழா – நூல் வெளியீடு – பரப்புரைக் கூட்டம் நடத்தப்படும்.
ஒவ்வொரு கழக உறுப்பினரும் உண்மை, பெரியார் பிஞ்சு இதழ் சந்தா சேர்க்க வேண்டும்.
2026 ஆம் ஆண்டில் கழக மாணவர் கழகம் & இளைஞ ரணி உருவாக்கப் படும்.
அனைத்து ஒன்றியங் களிலும் கழக அமைப்புகள் உருவாக்கப்படும்.
