வல்லம், டிச. 13- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பாக செயல்படும் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக மாணவர்கள் 01.12.2025 அன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
உலக எய்ட்ஸ் தினம் அனு சரிக்கும் பொருட்டு எய்ட்ஸ்/எச்அய்வி விழிப்புணர்வு ஏற் படுத்துதல் எச்அய்வி / எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக் கப்படாமல் இருக்கவும் எச்அய்வி / எய்ட்ஸ் தொற்று இல்லாத சமூகத்தை உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அலுவலர் கலைவாணி, தஞ்சாவூர் மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், தஞ்சாவூர் மண்டல திட்ட மேலாளர் ஜெனிபர் அருள் மேரி, தஞ்சாவூர் காசநோய் துணை இயக்குநர் மாதவி மற்றும் தஞ்சாவூர் தாசில்தார் சிவக்குமார் ஆகியோருடன் 01.12.2025 அன்று காலை 9.00 மணியளவில் தஞ்சாவூர் இரயில் நிலைய சந்திப்பில் தொடங்கி அரசு இராசா மிராசுதாரர் மருத்துவமனை வரை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் சுமார் 70 பேர் கலந்து கொண்டனர். இப்பேரணியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜி.செங்கொடி, ஆர்.நடராஜன் மற்றும் பி. மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
