15.12.2025 அன்று புதுச்சேரியில் நடைபெற உள்ள ‘பெரியார் உலகம்’ நிதியளிப்பு பொதுக் கூட்டம் அழைப்பினை புதுச்சேரி மாநில முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களிடம் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், புதுச்சேரி மாநில தலைவர் சிவ. வீரமணி, மாவட்ட தலைவர் வே. அன்பரசன், காப்பாளர் ராசு, துணைத் தலைவர் குப்புசாமி, செயலாளர்
ராசா துளசிராமன் ஆகியோர் 13.12.2025 அன்று வழங்கினர்.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகனிடம் 15.12.2025 அன்று நடைபெற உள்ள ‘பெரியார் உலகம்’ நிதியளிப்பு மற்றும் ‘‘இதுதான் ஆர் .எஸ் .எஸ். – பாஜக ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் அழைப்பினை கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன்,புதுச்சேரி மாநில தலைவர் சிவ வீரமணி, மாவட்ட தலைவர் வே. அன்பரசன், செயலாளர் தி. ராஜா, விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், பெரியார் பெருந்தொண்டர் குப்புசாமி ஆகியோர் வழங்கினர். நிகழ்வில் பங்கேற்க கேட்டுக் கொண்டனர்.
