கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 35 பேர் ஆட்சியர் தகவல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாகர்கோவில், டிச. 13- கன்னியா குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று (12.12.2025) நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஆட்சியர் அழகுமீனா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

வாக்காளர்கள் கணக்கீடு

கன்னியாகுமரியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15,92,872 வாக்காளர்கள் உள்ளனர். அதில் கன்னியாகுமரி தொகுதியில் 2,74,049 கணக்கீட்டு படிவங்களும், நாகர்கோவில் தொகுதியில் 2,43,337 கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டுள்ளது.

மேலும் குளச்சல் தொகுதியில் 2,51,262-ம், பத்மநாபபுரம் தொகுதியில் 2,24,145-ம், விளவங்கோடு தொகுதியில் 2,14,196-ம், கிள்ளியூர் தொகுதியில் 2,32,219 என மொத்தம் 14,39,208 கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டு மின்னணுமயமாக்கப்பட்டு உள்ளது. இதில் 5,72,471 வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்கள் சுயமாக வரைபடமாக்கப்பட்டு உள்ளது.

இதுபோக 6 தொகுதிகளிலும் மொத்தம் 8,58,079 வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்கள் சந்ததியினராக வரைபடமாக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 8,658 கணக்கீட்டு படிவங்களில் 8,534 கணக்கீட்டு படிவங்கள் வரைபடமில்லாததாகும். 124 கணக்கீட்டு படிவங்கள் பூத் லீடர் அதிகாரியால் சரிபார்க்கப்பட இயலவில்லை. 6 தொகுதிகளிலும் மொத்தம் 57 ஆயிரத்து 2 வாக்காளர்கள் இறந்துள்ளார்கள்.

இதில் அதிகளவு குளச்சல் மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் ஆகும். மேலும் 8,566 வாக்காளர்களின் தகவல் கிடைக்க பெறவில்லை. இதேபோன்று 75,994 வாக்காளர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்துள்ளார்கள் என அறியப்பட்டுள்ளது. 11,851 வாக்காளர்கள் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 1,53,669 கணக்கீட்டு படிவங்கள் மின்னணு மயமாக்கப்படவில்லை.

100 வயதைக் கடந்த
35 பேர்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி களில் 16 ஆண்கள், 19 பெண்கள் என மொத்தம் 35 வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள் ஆவர். 6,543 ஆண்கள், 7,545 பெண்கள் என மொத்தம் 14,198 வாக்காளர்கள் 85 வயது முதல் 99 வயதிற்குட்பட்டவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தேர்தல் தனி தாசில்தார் வினோத், உசூர் மேலாளர் (பொது) சுப்பிரமணியன், பெல் நிறுவன பொறியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்த கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *