பஞ்சாப்பில் அரசு அலுவலகங்களில் நேர மாற்றம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்

2 Min Read

அரசியல்

சண்டிகர், மே 3- கோடை கால வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள அலுவலக நேரத்தை மாற்றி அறிவிப்பது உள் ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில், “மே 2ஆம் தேதி முதல், அரசு அலுவல கங்கள், காலை 7:30 – பகல் 2:00 மணி வரை மட்டுமே செயல்படும்,” என்று முதலமைச்சர் பகவந்த் மான் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

அந்த பணி நேர மாற்றம் நேற்று (2.5.2023) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை செயல்பட்ட அரசு அலு வலகங்கள் நேற்று காலை 7.30 மணிக்கே செயல்பட தொடங்கின. இந்த நடை முறை, ஜூலை 15 வரை அமலில் இருக் கும்.

இதுகுறித்து முதலமைச்சர் பகவந்த் மான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணிக்கு திறக்கப்படும். பிற்பகல் 2 மணி வரை இயங்கும். இந்த நடிவடிக்கை பல்வேறு பயன்களை தரும். இந்த நடைமுறையை அமல்படுத்துவது குறித்து நாங்கள் பணியாளர்களிடமும், பொதுமக்களி டமும் பேசி அவர்களின் சம்மதத்து டனே இதை செயல்படுத்தி உள்ளோம். 3 வாரங்களுக்கு முன்பே கூறிவிட்டதால் ஊழியர்கள் மனதளவில் இதற்கு தயாராகிவந்தனர்.

இந்த பணி நேர மாற்றத்தால் பணி யாளர்கள், பொதுமக்கள் கோடை வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத் துக் கொள்ள முடியும். மேலும் அலு வலக மின்சார செலவும் சிக்கனமாகும். புதிய பணி நேரத்தால் தினமும் 350 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு சுமார் 17 கோடி ரூபாய் வரை மிச்சமாகும். மொத்தமாக ஜூலை வரை ரூ.42 கோடி வரை மிச்சமாகும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

அரசு அலுவலகங்கள் காலையி லேயே திறப்பதால் பொதுமக்கள் விரைவாக தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு, மீண்டும் தங்கள் அன்றாட பணிகளை கவனிக்கச் செல்ல முடியும். பள்ளி நேரத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இருப்பதால் மாணவ, மாணவிகளுக்கும், அவர்களின் பெற் றோருக்கும் பல இடையூறுகள் தவிர்க் கப்படும்.

போக்குவரத்து நெரிசல் மிக்க டில்லி, சென்னை, பெங்களூரு, கொல் கத்தா போன்ற நகரங்களில் இந்த பணி நேர மாற்றத்தை அமல்படுத்தினால் பல்வேறு சூழல்களை எளிதாக சமா ளிக்க முடியும். எங்களின் இந்த நடை முறையை ஆய்வு செய்து பிற மாநிலங் கள் இதை பின்பற்றி பயனடையக்கூடும்.”

-இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றப்பட்ட பணி நேரம், ஜூலை 15ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்படுமா? என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் “இந்த நடவடிக்கையின் பலன்கள், முடி வுகளை அரசாங்கம் கவனித்துப் பார்த்து, ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கருத்துகளை பெற்று, பின்னர் அது குறித்து முடிவு எடுக்கப் படும்” என்றார்.

பணி நேர மாற்றத்தை கடைப்பிடித்து பஞ்சாப் அமைச்சர்கள் பலரும் காலையிலேயே தங்கள் அலுவலகத்திற்கு வந்து செயல்பட தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *