அறிவுக்கு உயிரானார்
ஆரியத்திற்கு எதிரானார்
அடிமைக்கு விடிவானார்
ஆக்கத்திற்கு கருவானார்
திராவிடத்தின் திருவானார்
திசைகாட்டும் கருவியானார்
தீந்தமிழர்க்கு மருந்தானார்
திராவிடர்க்கு அரணானார்
படித்திட வழிகண்டார்
பார்ப்பனசதி வென்றார்
ஆதிக்கம் அழித்திட்டார்
அதிகாரம் அளித்திட்டார்
சூத்திரப் பஞ்சமரின்
சுயமரியாதை பாதுகாத்திட்ட
நாத்திக தந்தைமறைந்து
53ஆவது நினைவு நாள்
மூச்சு வாங்கும் முப்புரியார்
முண்டாதட்டி இறங்கிவிட்டார்
காப்பறுப்போம் என்றறிந்து
கலக்கத்தில் கதறுகிறார்
பெரியாரின் பெரும்படையை
பேரிடிபோல் வழிநடத்தும்
போராளர் தமிழர்தலைவர்
பெருந்தலைமை பகைவெல்லும்
பெரியார் நினைவுநாளில்
உறுதியேற்போம்!
பெரியார் உலகமைப்போம்!
– முனைவர் அதிரடி க.அன்பழகன்,
மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்.
