கும்பமேளா முதல் சபரிமலை வரை 2025 – கூட்ட நெரிசல் மரணங்கள்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒவ்வோர் ஆண்டும் ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் கோவிலுக்கும் சாமியார்களைப் பார்ப்பதற்கும் சென்று கூட்ட நெரிசலில் மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

  1. கும்பமேளா கூட்ட நெரிசல்: (பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேசம் – ஜனவரி 29, 2025)மகா கும்பமேளாவின் மிக முக்கியமான நாளான மவுனி அமாவாசையன்று, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆறுகளின் சங்கமத்தில் (திரிவேணி சங்கமம்) புனித நீராட்டுக்காக கோடிக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். அதிகாலையில் (இரவு 1-2 மணிக்கு) ஏற்பட்ட நெரிசலில் 30 பேர் இறந்தனர்; 60-90 பேர் காயமடைந்தனர்.
  2. திருப்பதி வைகுண்ட ஏகாதசி கூட்ட நெரிசல்: ஜனவரி 6/8, 2025)வைகுண்ட ஏகாதசி விழாவின் தரிசன நுழைவுச் சீட்டுகளைப் பெறுவதற்காக திருப்பதி தேவஸ்தானம் அமைத்த 90 கவுன்டர்களில் பக்தர்கள் குவிந்தனர். ஜனவரி 8-ஆம் தேதி இரவு ஏற்பட்ட நெரிசலில் 6 பேர் இறந்தனர் (பெரும்பாலும் பெண்கள்). மேலும் 20-40 பேர் காயமடைந்தனர். இது 10 நாட்கள் நீடிக்கும் விழாவின் தொடக்கத்தின் போது நடந்தது.

காரணம்: நுழைவுச் சீட்டுகள் விநியோகம் தொடங்கியதும் (ஜனவரி 9 முதல்) லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கவுன்டர்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

  1. புதுடில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல்: (புதுடில்லி – பிப்ரவரி 15, 2025)மகா கும்பமேளாவிற்குப் பிறகு திரும்பும் பக்தர்கள் கூடுதல் ரயில்களில் ஏறுவதற்காக காத்திருந்தனர். இரவு 9:15-9:30 மணிக்கு பிளாட்பார்ம் 14-15 ஏற்பட்ட நெரிசலில் 18 பேர் இறந்தனர் (9 பெண்கள், 5 குழந்தைகள், 4 ஆண்கள்) மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.காரணம்: ரயில் தாமதங்கள், தனி பெயர் ஒத்திருந்த ரயில்கள் குழப்பம் மற்றும் திடீர் அறிவிப்புகள் காரணமாக பக்தர்கள்
  2. சிறீ லைராய் தேவி கோவில் திருவிழா: கோவா – மே 3, 2025)ஆண்டுதோறும் நடக்கும் லைராய் தேவி ஜாத்ரா (திருவிழா) தொடக்கத்தில் அதிகாலையில் ஏற்பட்ட நெரிசலில் 6-7 பேர் இறந்தனர். 50-80 பேர் காயமடைந்தனர்.
  3. மான்சா தேவி கோவில் கூட்ட நெரிசல்: (அரித்வார், உத்தரகாண்ட் – ஜூலை 27, 2025)ஸ்ராவண மாத சிறப்பு பூஜைக்காக மான்சா தேவி கோவிலுக்குச் சென்றபோது, கோவிலுக்கு முன் இருக்கும் குறுகிய பாதையில் ஏற்பட்ட நெரிசலில் 8-9 பேர் இறந்தனர்
  4. வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் ஏகாதசி விழா: (சிறீகாகுளம், ஆந்திரப் பிரதேசம் – நவம்பர் 1, 2025)கர்த்திகை ஏகாதசி அன்று சிறீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் (காசிபுக்கா) தரிசனத்திற்காக 20,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியபோது ஏற்பட்ட நெரிசலில் 9 பேர் இறந்தனர் (8 பெண்கள், ஒரு குழந்தை) மற்றும் 15-30 பேர் காயமடைந்தனர். இந்த தனியார் கோவில் 4 மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.

சபரிமலை

தற்போது கார்த்திகை மாதம் துவங்கவிட்டது. ஆந்திரா, தமிழ்நாடு, கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சபரிமலைக்குச் செல்வார்கள்.

டிசம்பர் 10 ஆம் தேதிவரை சபரிமலைக்குச் சென்று திரும்பும் போதும் சபரிமலையில் கூட்ட நெரிசலிலும் சிக்கியும், சாலைவிபத்தில் சிக்கியும் இதுவரை 14 பேர் மரணமடைந்துள்ளனர். 21க்கும் அதிகமானோர் படுகாயத்துடன் தமிழ்நாடு, ஆந்திரா மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

ஞாயிறு மலர்

இறந்தவர்களில் பெரும்பாலானோர் மிகவும் குறைந்தவயதுடையவர்கள் குடும்ப பாரத்தை சுமக்கும் முக்கிய நபர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *