சென்னை, மே 3- ஆவின் நிறுவனம் 2 லட்சம் ஜெர்சி கலப்பின மாடுகளை வாங்க முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 36 லட்சம் லிட்டர் பாலை தினசரி கொள்முதல் செய்து வருகிறது. ஆவின் நிறுவனம் 1 லிட்டர் பசும்பாலுக்கு அதிகபட்சமாக ரூ.35ம், எருமைப் பாலுக்கு ரூ.42 வீதம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்கி வந்தது.
அதே சமயம் தனியார் பால் கொள் முதல் மய்யங்களின் கூடுதல் விலைக்கு பால் கொள்முதல் செய்யப்படுவதால் ஆவினுக்கு பால் ஊற்றும் பால் உற் பத்தியாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பால் உற்பத்தியாளர் சங்கங்களுடன், ஆவின் அமைச்சர் நாசர், செயலாளர் கார்த்திக் மற்றும் அதிகாரிகள் சமீபத் தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் பால் உற்பத்தியாளர்கள் பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந் தனர். அதன் அடிப்படையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் சில உடன்பாடு எட்டப்பட்டது. சில கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது.
இதன் காரணமாக ஒரு சில பால் உற்பத்தியாளர்கள் இன்னும் தனியாரி டம் தான் பால் ஊற்றி வருகின்றனர். இதனால் ஆவினுக்கு பால் தட்டுப்பாடு இன்னும் நிலவி வருகிறது. தற்போது உள்ள 9,673 தொடக்கப் பால் உற் பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் 3.99 லட்சம் பால் பண்ணையாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்கிறது.
இந்த பால் போதுமானதாக இல்லாததால் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியை பெருக்க விரிவான திட்டம் வகுத்து வருகிறது.
அதன்படி வெளிமாநிலங்களில் இருந்து 2 லட்சம் கலப்பின ஜெர்சி கறவை மாடுகளை வாங்க முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாடுகளின் விலை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
கூட்டுறவு பால் சொசைட்டியில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வங்கிக் கடன் மூலம் ஜெர்சி மாடுகளை வாங்கிக் கொடுத்து பால் உற்பத்தியை பெருக்குவதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்காக அரசின் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது.
வங்கிக் கடனை பெறுவதில் சிரமங் களை எதிர்கொள்ளும் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் கறவை மாடுகளை வாங்குவதற்கு உதவி செய்யும். இதற்காக பால் உற்பத்தி யாளர்களின் மாதாந்திர தவணைகளை செலுத்துவதற்கான வங்கி உத்தர வாதத்தை ஆவின் வழங்குவதுடன் பணத்தை திருப்பி செலுத்தும் தொகை உற்பத்தியாளர்களின் பால் பில்லில் சேர்க்கப்பட்டு பால் ஊற்ற, ஊற்ற அந்த பணம் மாதாமாதம் கழிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆவினுக்கு சங்கம் மூலம் பால் ஊற்றும் விவசாயிகளுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.