விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் கார்ப்பரேட்டின் ஆதிக்கமே இந்த நெருக்கடிக்குக் காரணம்

தற்போது இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் இண்டிகோ நிறுவனம் மட்டும் 65 சதவீதத்துக்கும் அதிகமான சந்தைப் பங்கினைக் கொண்டுள்ளது. இவ்வளவு பெரிய நிறுவனத்தில் ஏற்பட்ட நெருக்கடி, அதிகமான பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
“எந்தவொரு பொருளாதார வளர்ச்சியிலும் போக்குவரத்து, குறிப்பாக விமானப் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. அது பொருளாதாரத்தின் நரம்புகளில் ஓடும் ரத்தத்தைப் போன்றது”
தனியார் மயம்
‘இண்டிகோ’ நிறுவனம் இயல்பாகவே ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்துள்ளது. நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில், சந்தையில் டெக்கான் ஏர்வேஸ், ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர், கோஏர் போன்ற பல விமான நிறுவனங்கள் இருந்தன. ஆனால் மறைமுக மிரட்டல் மற்றும் அரசுக்கு ஆதரவாக செயல்படும் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே காட்டும் சலுகையால் காலப்போக்கில் பல விமான நிறுவனங்கள் மூடுவிழா கண்டன.

“விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய முதலீட்டை ஈர்க்க பாஜக அரசு முயலவில்லை. அதற்குக் காரணம் இவர்களின் கார்ப்பரேட் நட்(டப்)பு!
மன்மோகன் சிங் ஆட்சியின் போது ஒரு நிறுவனம் மூடப்பட்டால், மற்றொரு நிறுவனம் வந்துவிடும். 2013இல் ‘இண்டிகோ’வின் சந்தைப் பங்கு சுமார் 32 சதவீதமாக இருந்தது, அது இப்போது 65 சதவீதத்தை எட்டியுள்ளது.”
விமானப் போக்குவரத்துத் துறை மட்டுமல்ல; முக்கிய துறைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்ள ஒன்றிய அரசு தெளிவான விதிகளை வகுக்கவில்லை.

ஆனால், ஒன்றிய பாஜக அரசு சில கார்ப்பரேட்டு களுக்கு மட்டும் தன்னிச்சையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கையே கார்ப்பரேட்டின் ஆதிக்கத்திற்கு ஆதரவாக மாறி விட்டது என்றும், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து போன்ற பல துறைகளில் அரசு ஆதரவு பெற்ற கார்ப்பரேட்டின் ஏகபோகத் தன்மை உருவாகி வருகிறது. “இது, பலதரப்பட்ட துறைகளில் எதிர்மறையான சூழலை உருவாக்க ஒரு திட்டத்துடன் அரசாங்கம் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்கு இவ்வளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டு, இன்று அது தனியார் முதலைகள் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு எப்படி சென்றுவிட்டது!
ஏகபோக உரிமை வைத்திருப்பதன் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், அந்த நிறுவனம் மூடப்பட்டால், முழுத் துறையும் சரிந்துவிடும் என்பது தான்!
