“கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் சிறகை விரித்தாடினால் போலுமே கல்லாதான் கற்ற கல்வி” என்பதற்கு எடுத்துக்காட்டாக மகாராட்டிரா அரசைக் கூறலாம்.
திராவிட மாடல் அரசின் வெற்றிகரமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அப்படியே காப்பி அடித்து 2024 நவம்பர் மாதம் மகாராட்டிர மாநில தேர்தலில் வெற்றி பெற பாஜக கூட்டணி அரசு தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு கொண்டு வந்தது.
மகாராட்டிராவில் அதிக இடங்களைப் பெற்றும் போதிய பெரும்பான்மை இல்லாததால் சிவசேனா, தேசியவாத கட்சிகளை உடைத்து அதன் மூலம் பாஜக முதலமைச்சராக தேவேந்திர பட்னவீஸ் உள்ளார்.
தேர்தல் முடிந்த ஒராண்டைக் கடந்த நிலையிலும் அவர்களால் தமிழ்நாட்டின் மகளிர் உரிமைத்தொகை கொடுத்த வெற்றிச்சாதனை எல்லையை அடையமுடியவில்லை.
அந்த திட்டத்தின் தோல்வில் குறித்து மகாராட்டிரா மாநில அரசே ஒப்புகொண்ட செய்தி மராட்டி தைனிக் புடாரி நாளிதழில் வந்த செய்தியின் தமிழாக்கம்.
மகாராட்டிராவில் பெண்களுக்கான பணப் பரிமாற்றத் திட்டமான ‘லாட்கி பஹின் யோஜனா’ (Laadki Bahin Scheme) திட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக, இது தோல்வியைச் சந்தித்துள்ளது என்று மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
திட்டத்தின் தோல்விக்கான முக்கிய விவரங்கள்
- தகுதியற்ற பயனாளிகள்: குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தின் கீழ், சுமார் 26.3 இலட்சம் தகுதியற்ற பயனாளிகள் பணம் பெற்றுள்ளனர்.
- இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ1,640 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
- ஆண்கள் வங்கிக்கணக்கிலும் வரவு: இந்தத் திட்டம் பெண்களுக்காக என்ற போதிலும், 14,298 ஆண்கள் தவறாகத் தங்களைப் பெண்களாகப் பதிவுசெய்து பணம் பெற்றுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ22.7 கோடி முறைகேடாக செலவாகி உள்ளது
- அரசு ஊழியர்கள்: சுமார் 1,526 அரசு ஊழியர்களும் தகுதியற்ற முறையில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ 14.5 கோடி பெற்றுள்ளனர்.
- பல திட்டங்களில் பலன்: சிலர் ஒரே குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பயனாளிகளாகப் பல திட்டங்களில் பலன் பெறுவது, குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 இலட்சத்திற்கு அதிகமாக இருப்பது போன்ற பிற தகுதிக் குறைபாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
- இரட்டைப் பலன்: இத்திட்டத்தின் விதிமுறைகளின்படி, வேறு அரசுத் திட்டங்களில் பலன் பெறுபவர்களுக்கு லாட்கி பஹின் யோஜனா திட்டத்தின் கீழ் கிடைக்கும் மொத்தப் பலன் 1,500 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், இந்த விதி மீறப்பட்டுள்ளது.
இதை தடுக்கும் விதமாக மீண்டும் ஆய்வு நடத்துகிறோம் அதுவரை இத்திட்டம் நிறுத்திவைக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார்
| அம்சம் | தமிழ்நாடு | பிற மாநிலங்கள் மகாராட்டிரா, டில்லி, மத்தியப்பிரதேசம், பீகார் | தமிழ்நாட்டின் பொருளாதார தாக்கம் |
| பெண் தொழிலாளர் பங்கேற்பு | அதிகமாக உள்ளது. பெண் பயனாளிகள் விகிதம் தேசிய சராசரியை விட அதிகம். | குறைவாகவும், சரியான புள்ளிவிபரம் இல்லாமல் குழப்பமாக காணப்படுகிறது. | தமிழ்நாட்டு வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) அதிகரிக்கிறது. |
| பொருளாதார வளர்ச்சியும் பரவலும் | பெண்கள் அரசால் ஒழுங்கமைக்கப் பட்ட மற்றும் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் வேலை செய்கிறார்கள். | வட மாநிலங்களில் பெண்கள் விவசாயம் மற்றும் முறைசாரா அரசு சட்டவிதிகளுக்கு எதிர்மறையாக செயல்படும் தொழிற்சாலைகளில் அதிகம் பணிபுரிகின்றனர் இதனால் அவர்களின் உரிமைகள் வேறுவகையில் பறிபோகிறது | அதிக ஒழுங்கமைக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் அதிக ஊதியத்தையும் நிலையான பொருளாதார வளர்ச்சியையும் குறிக்கின்றன. |
| கல்வி நிலை | உயர் கல்விக்கான பெண்களின் சேர்க்கை விகிதம் சாதனை புள்ளியையும் தாண்டி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது | வட மாநிலங்களில் பெண்கல்வி மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. | கல்விக்கான முதலீடு மனித மூலதனத்தை வளர்க்கிறது, இது நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். |
| வளர்ச்சியின் தரம் | சமூகக் குறியீடுகள் (சுகாதாரம், ஊட்டச்சத்து) பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக உள்ளன. | பொருளாதார வளர்ச்சி சமூகக் குறியீடுகளில் மிகவும் மோசமான இடத்தினை கொண்டிருக்கலாம். |
உள்ளடக்கிய வளர்ச்சி சமூக ஸ்திரத்தன்மையையும், வறுமைக் குறைப்பையும் உறுதி செய்துள்ளது. |
