உரத்தநாடு, மே 3- உரத்தநாடு ஒன்றிய, நகர திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரை யாடல் கூட்டம் 29.04.2023 அன்று இரவு 7.30 மணியளவில் உரத்த நாடு பெரியார் படிப் பகத்தில் நடை பெற்றது
கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், மாவட்டச்செயலளர் அ.அருணகிரி, ஒன்றியத்தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் நல். பரமசிவம், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா.இராம கிருஷ்ணன், மாவட்ட துணைச்செய லாளர் அ.உத்திராபதி, நகரத் தலைவர் பேபி.ரெ.இரவிச்சந்திரன், நகர செயலா ளர் ரெ.ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரத்தநாடு ஒன்றியத்தில் கழக செயல்பாடு களை தீவிரப்படுத்திட ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினர்
* நிறைவுபெற்ற விடுதலை சந்தாக் களை புதுப்பித்து ஈரோடு பொதுக் குழுவில் வழங் குவது
* வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்களை ஒன்றியம் முழுவதும் தொடர்ந்து நடத்துவது என முடிவு செய் யப்பட்டது
உரத்தநாடு ஒன்றியத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா பொதுக் கூட் டங்கள்:
05.05.2023-வெள்ளி – உரத்தநாடு நகரம்
சிறப்புரை: இரா.பெரியார்செல்வன்
08.05.2023-திங்கள்-சடையார் கோயில்
சிறப்புரை: இராம.அன்பழகன்
09.05.2023-செவ்வாய்-வடசேரி
சிறப்புரை-வழக்குரைஞர் சே.மெ.மதி வதனி
10.05.2023 – புதன் – தெற்குநத்தம்
சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன் பழகன்
11.05.2023-வியாழன்-புலவன்காடு
சிறப்புரை:வழக்குரைஞர் பூவை. புலிகேசி