சுயமரியாதை நாள் விழா சிந்தனை திரட்டு, பணக்காரத்தன்மை ஒரு மூடநம்பிக்கையே, நூல்கள் வெளியீடு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சாவூர், டிச. 12- தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சி சரபோஜி நகரில் அமைந்துள்ள குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தின் சார்பில் ஆசிரியர் அவர்களின் 93-ஆவது பிறந்தநாள் விழா எழுச்சியோடு நடைபெற்றது.

‘வாழ்வியல் சிந்தனைகள்’ வாசகர் வட்டத் தலைவர் பி.எஸ்.ஆர்.மாதவராஜ் வரவேற் புரையாற்றினார். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்றார். வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்ட புரவலர்கள் வழக்குரைஞர் ப.பவித்திரன், பொறியாளர் ப.பாலகிருட்டினன், பூதலூர் நகர செயலாளர் ப.விசய குமார், நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், திராவிட மகளிர் பாசறைத் தலைவர் அஞ்சுகம்,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் தொடக்கவுரையாற்றினார்.

ஆசிரியர் அவர்கள் தொகுத்து 1957இல் தஞ்சையில் வெளியிடப்பட்ட  முதல் நூலான ‘சிந்தனை திரட்டு’, ‘பணக்காரத் தன்மை ஒரு மூடநம்பிக் கையே’ என்ற நூல்களை  திமுக மூத்த முன்னோடி கா.முத்துகிருட்டிணன் வெளியிட்டார்  பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தலைவர் கபடி.நா.இராமகிருட்டிணன் பெற்றுக்கொண்டார்.

வருகைதந்தோர் வாங்கி மகிழ்ந்தார்கள். கழகப் பொதுச் செயலாளர்.முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார் .

‘வாழ்வியல் சிந்தனைகள்’ வாசகர் வட்டச் செயலாளர்  அழகு.ஆ.இராமகிருட்டிணன் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது. நிகழ்வில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார், மாவட்ட ப.க.தலைவர் ச.அழகிரி, உரத்தநாடு தெற்கு ஒன்றியச் செயலாளர் மாநல்.பரமசிவம், உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தொழிலாளர் அணி தலைவர் தன்மானம், மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் ச.சந்துரு வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டப் பொருளாளர் பேரா.குட்டிமணி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *