நான் முதலில் பெரியாரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தது இணைய தளம் எனப்படும் யூடியூப் போன்றவைகளின் மூலமாகத்தான். 2015, 2017 போன்ற காலகட்டங்களில் மோடிதான் பெரிய ஆள் என்று நினைத்து வந்திருந்தேன். ஆனால் அவர்களுடைய இந்துத்துவா அரசியல், அதனுடைய விளைவுகள் இதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகுதான் தந்தை பெரியாரை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அதன் பின்னர்தான் பெரியார் கடவுள் மறுப்பாளர் மட்டுமல்ல அவர் முதலில் மூடநம்பிக்கையின் பிரதான எதிர்ப்பாளர்.
மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவருடைய கோட்பாடுகள், தத்துவங்கள், கருத்துக்கள், பிரச்சாரங்கள்,
புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடித்தது. இன்றைய காலகட்டத்திற்கு பெரியார் மிக அவசியமாக தேவை என்று மிக அழகாக பேசிய நவநாகரீக இளைஞர் ஒருவரின் பேச்சு புத்தகக் காட்சியில் பெரியார் நூலக அரங்கத்தில் பதிவு செய்யப்பட்டு Periyar Vision OTT– இல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றே காணுங்கள்.
– எல். துவாரகதாஸ்
மன்னார்குடி

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com

