சிகரெட், மது, எய்ட்ஸ், காசநோய் போன்ற காரணங்களால் இறப்பவர்களை விட, காற்று மாசால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாசுபட்ட காற்றில் உள்ள பி.எம். 2.5 நுண்துகள்கள், ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து, சர்க்கரை நோயை உண்டாக்குகிறதாம். தாய் வயிற்றிலிருக்கும் போதே, கடைசி 3 மாதங்களில் காற்று மாசால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில்உயர் ரத்த அழுத்தம் (high BP) ஏற்படும் ஆபத்து அதிகமாம்.
த.வெ.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்
2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நெல்லை தெற்கு மாவட்ட தவெக வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் முன்னிலையில் திமுகவில் இணைந் தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர்.
