மதுரை, டிச.12 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று (11.12.2025) மதுரையில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தேர்தல் பற்றி இன்னும் நாங்கள் சிந்திக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகு விருப்ப மனுக்கள் பெறுவோம். திமுக கூட்டணியில் சிறு சலசலப்பு கூட இல்லை.
தமிழ்நாட்டில் இந்துத்துவா சக்திகளை உள்ளே நுழைக்க நினைக்கின்றனர். திமுகவை வீழ்த்தும் முயற்சி நடக்கிறது. திமுக மட்டுமின்றி கூட்டணி கட்சிகளையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. எதிர்கட்சிகளை பாஜக நசுக்க பார்க்கிறது. திமுகவை உடைத்து துடைத்து எறிவோம் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசுகிறார். 100 அமித் ஷாக்களை திமுக எதிர்க்கொண்டுள்ளது. அமித்ஷா கட்சிகளை விமர்சனம் செய்யும்போது, கவனத்துடன் பேச வேண்டும்.
அறிவாலயம் வந்தால் தேர்தல் கூட்டணி பேச்சு என்று அர்த்தமா?
சி.பி.அய். இரா.முத்தரசன் கேள்வி
சென்னை, டிச.12 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண் டியன், மேனாள் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் சந்தித்தனர்.
பின்னர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘எங்கள் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் பங்கேற்க வேண்டுமென அழைப்பிதழ் கொடுத்துள்ளோம். கூட்டணி பேச்சு வார்த்தைக் குழு அமைப்பது குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றார்.
கூட்டணி தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு முத்தரசன், ‘அறிவாலயம் வந்தாலே கூட் டணி பேசத் தான் வருவோமா? ஏன் பதட்டமான செய்திகளை உருவாக்குகிறீர்கள்? நாங்கள் முதலமைச்சரை மக்கள் பிரச் சினைக்காக சந்திக்க வரமாட் டோமா’ என்று கூறினார்.

