மதக் கலவரங்களுக்கு உயர்நீதித்துறை ஆயுதம் ஆகலாமா? சட்டப்பூர்வ ஆய்வுரை அரங்கம் நேற்று (11.12.2025) மாலை சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்றது. முன்னதாக, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்பு –தொடக்கவுரையாற்றினார். இதைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ். பாரதி, சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி மாண்பமை து. அரிபரந்தாமன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆகியோர் திருப்பரங்குன்றத்தைக் ‘கலவர பூமியாக’ மாற்ற ஸநாதனிகள் முயற்சிப்பதைக் கண்டித்து சட்டப்பூர்வஆய்வுரையை நிகழ்த்தினர். கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி நன்றி கூறினார். நிகழ்வை திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தொகுத்து வழங்கினார்.
