மதுரை, டிச.12 திருப்பரங்குன்றத்தில் இருப்பதுதீபத்தூண் அல்ல; சர்வே தூண் என்று ஆர்டிஅய் கேள்விக்கு இந்திய நில அளவைத்துறை பதில் அளித்துள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் ேகாயில் அருகே தீபம் ஏற்றப்படும் தூணுக்கு பதில், மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள நில அளவைக்கான ‘சர்வே தூணில்’ தீபம் ஏற்ற பாஜ மற்றும் இந்து அமைப்பினர் கோரி வருகின்றனர்.
ஆனால் இது ‘சர்வே கல் தூண்’ என பல்வேறு தொல்லியல் ஆதாரங்களும் தொடர்ந்து காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகேயுள்ள தூண் குறித்து திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார் கடந்த 2022 ஜனவரியில் ஆர்டிஅய் மூலம் கேட்டிருந்தார்.
இதற்கு அதே ஆண்டு மார்ச் மாதம் இந்திய நில அளவைத்துறை அளித்துள்ள பதிலில், ‘‘திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது ‘சர்வே கல்’ தான். 1808-1809, 1871ஆம் ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் மலையில் சர்வே கற்கள் நிறுவப்பட்டன. அரசு ஆவணங்களின்படி திருப்பரங்குன்றம் மலையில் 2 சர்வே கற்கள் உள்ளன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படியும் ஒரு விவாகரத்தா?
பக்தி மத பைத்தியத்தால் ஏற்பட்ட மணமுறிவு!
l சமையலில் பூண்டு, வெங்காயத்தால்
ஏற்பட்ட கருத்து வேறுபாடு
l 23 ஆண்டு கால மண வாழ்க்கை முறிந்தது
அகமதாபாத்,டிச.12 சமையலில் பூண்டு, வெங்காயம் பயன்படுத்தியது தொடர்பாக தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, 23 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது .குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 2002-இல் திருமணம் நடந்தது. மனைவி சுவாமி நாராயண பக்தையாக இருப்பதால், சமையலில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பதை தவிர்த்து வந்தார். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சமையலில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர், இது இருவருக்கும் இடையே தொடர் தகராறுகளுக்கு வழிவகுத்தது. அப்போதும் பிரச்சினை தீராததால், குழந்தையுடன் கடந்த 2007ஆம் ஆண்டு மனைவி, தனது தாய் வீட்டுக்குச் சென்றார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கணவர், விவாகரத்து கோரி அகமதாபாத் குடும்பநல நீதிமன்றத்தில் 2013ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார்.
விவாகரத்து
இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து விவாகரத்து மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மேலும், மனைவிக்கு வாழ்க்கைப்படி வழங்கவும் கணவருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் விவாகரத்து வழங்கியது செல்லாது என அறிவிக்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சங்கீதா விஷேன், நிஷா தாக்கூர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் விவகாரத்தை குடும்ப நல நீதிமன்றத்தில் எதிர்க்கவில்லை என்று தெரிந்ததும், மனைவியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், நிலுவையில் உள்ள வாழ்க்கைப்படி தொகையை தவணை முறையில் நீதிமன்றத்தில் செலுத்தும்படி கணவருக்கு
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வரலாறு காணாத சரிவு… மிகப்பெரிய தாக்கம்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ரூ.90.33 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்த சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, ஆர்.பி.்ய். முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
