இன்றைய வரலாற்று சூழ்நிலையில் விமர்சனப் பார்வையோ, பகுத்தறிவோ குறைந்து வருகின்ற நிலையில் பெரியார் போன்ற சிந்தனையாளர்கள் தைரியசாலிகள் தன்னுடைய சிந்தனை உணர்வுகளை தைரியமாக வெளிக்காட்டி வழிநடத்தக் கூடியவர்கள் மிக மிக அவசியம். இந்து மதம் பார்ப்பனர்களின் கைகளில் சிக்கி கோர தாண்டவம் ஆடக்கூடிய சூழ்நிலையில் ஒன்றிய அரசு அவர்களுக்கு கட்டுப்பட்டு ஜாதிப் படிநிலைகளை மேலும் வலுவூட்டுகிறது.
ஏராளமான தாழ்த்தப்பட்ட இளைஞர்களும், பிற்படுத்தப்பட்ட இளைஞர்களும் படித்து வாழ்க்கையை சிறப்பாக அமைக்க வேண்டும் என்று எண்ணுகின்ற வேளையில், இந்த காலகட்டத்தில் தந்தை பெரியார் மிக அவசியம். பார்ப்பனிய இந்து மதத்தை எதிர்க்க பெரியாரின் சிந்தனைகள்! என்ற தலைப்பில் புத்தகக் காட்சியில் பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த புதுமை தோற்றம் கொண்ட பெண் ஒருவர் கூறிய கருத்துகள் Periyar Vision OTT-இல் இடம் பெற்றுள்ளன. கண்டு தெளிவோம்.
– எல்.வசுமதி, திருப்பரங்குன்றம்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com
