9.12.2025 அன்று (நெய்வேலி ஆர்ச்கேட்) வடக்குத்தில் நடைபெற்ற ‘பெரியார் உலகம்’ நிதி அளிப்பு கூட்டத்தில் தமிழர் தலைவர் அவர்களிடம் கடலூர் மாவட்ட கழகம் சார்பில் வழங்கப்பட்ட நிதியில் கடலூரைச் சேர்ந்த டாக்டர் கலைக்கோவன் – டாக்டர் கிருஷ்ணப் பிரியா ஆகியோரின் மகள் யுகேஜி பயிலும் நன்முகை கோவன் தன் சொந்த சேமிப்பிலிருந்து ரூபாய் 25,000 வழங்கினார். நிதி வாங்கச் சென்றிருந்த எங்கள் உடல் சிலிர்த்தது. சிறுமியின் செயல் எடுத்துக்காட்டானது மட்டுமல்ல; பாராட்டத்தக்கதும் ஆகும்.
கடலூர் சிறுமி நன்முகை கோவன் (UKG), PERIYAR World பணிக்காக தனது சேமிப்பில் இருந்து ரூ.25,000 தொகையை திராவிடர் கழகத் தோழர்களுக்கு
(8-12-2025)வழங்கியுள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தந்தை பெரியார் புகழ் ஓங்குக !
