திருப்பதி கோயில் மோசடி தொடர்கிறது! லட்டிலிருந்து பட்டு… திருமலை ஏழுமலையான் கோயிலில் தொடரும் சர்ச்சை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருப்பதி, டிச.11–  திருப்பதி  ஏழுமலையான் கோயிலில் பட்டு சால்வை விநியோகத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப் பட்டுள்ளதாக அக்கோயிலை நிர்வகிக்கும் திருப்பதி தேவஸ்தானம் குற்றம் சாட்டியுள்ளது. 2015 முதல் 2025 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் இந்த மோசடி நடந்திருப் பதாக தேவஸ்தானம் குற்றம் சாட்டியுள்ளது.

நன்கொடையாளர்கள் மற்றும் விஅய்பி தரிசனத்தின் போது வழங்கப்படும் ‘பட்டு சால்வைகள்’, ‘பட்டால்’ செய்யப்பட்டவை இல்லை என்றும் 100 சதவீதம் பாலியஸ்டர் துணியால் செய்யப்பட்டவை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது விசாரணையில் உறுதிப்படுத் தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்  பட்டுள்ளது.

‘வி.ஆர்.எஸ்.எக்ஸ்போர்ட்’ என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே இந்த பட்டு சால்வைகளை கோயிலுக்கு விநியோகித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துவிட்டது. இந்த மோசடி மூலம் ரூ.54 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, “கொள்முதல் துறையில் சில முரண்பாடுகள் இருப்பதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு, விசாரணையை மாநில ஊழல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்துள் ளோம்” என்று அவர் கூறினார்.

கலப்பட நெய், நன்கொடை திருட்டு சர்ச்சைகளை தொடர்ந்து தற்போது பட்டு சால்வை ஊழல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *