சென்னை, டிச. 11 – “எந்த ஷா வந்தாலென்ன? எத்தகு சூழ்ச்சித் திட்டம் போட்டாலென்ன? ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை தக்க பாடம் புகட்டும்” என்று தி.மு. கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி” நிகழ்ச்சியில் பங்கேற்று தமது சமூக வலைதளத்தில் உறுதிபட பதிவிட்டுள்ளார்.
தி.மு.கழகத் தலைவரும் – முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (10.12.2025) மயிலாப்பூர் மேற்கு பகுதி, ஆழ்வார்பேட்டை, 122 ஆவது வட்டம், பாகம் 24-இல் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் கலந்துரை யாடினார்.
“தமிழ்நாடு தலைகுனியாது – என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பரப்புரையின் முதல் கட்டமாக 68,463 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது (SIR) தி.மு.க .வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் 6.8 லட்சம் பேரை BLO மற்றும் வாக்காளர்களுக்கு உதவிட தி.மு. கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
பரப்புரையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் தொடங்குகிறது. அடுத்த 30 நாட்களுக்கு மாநிலம் தழுவிய தீவிரமான பரப்புரையாக மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 10 முதல் ஜனவரி 10 வரை, பகுதி/ ஒன்றியம்/நகரம்/பேரூர் தி.மு.கழக செயலாளர்கள் 68,463-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளுக்குச்சென்று 2026 சட்டமன்றத் தேர்தலில் அந்தந்த வாக்குச்சாவடி அளவில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை வகுக்க பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.
6.8 லட்சம் பூத் கமிட்டி உறுப்பினர்கள்!
இதுவரை எந்தவொரு கட்சியும் செய்யாத வகையில் 1900 மேற்பட்ட பகுதி / ஒன்றியம் / நகரம் /பேரூர்க் கழகச் செயலாளர்களுடன் – 78 தி.மு. கழக மாவட்ட செயலாளர்கள், 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 124 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில, மாவட்ட குழு உறுப்பினர்கள் குழுவானது 30 நாட்களில் 68,463 வாக்குச்சாவடிகளையும் நேரடியாக பார்வையிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 6.8 லட்சம் திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களை உற்சாகப்படுத்தவும், அணிதிரட்டவும் பரப்புரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தி.மு. கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு பூத்திலும் தெருமுனைக் கூட்டங்கள், வீடு வீடாகச் சென்று கலந்துரையாடல்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு இயக்கங்கள் மூலம் அடித்தட்டு அளவில் தி.மு. கழக்கத்தினரை ஈடுபடுத்தி வாக்குச்சாவடி பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், முன்னோடி தலைவர்கள் உட்பட அனைத்து தி.மு.க. நிர்வாகிகளும் 2021 சட்டமன்ற தேர்தலை விட கூடுதல் வாக்குகளை தங்கள் வாக்குச்சாவடியில் பெறும் வகையில் தங்க ளது வாக்குச்சாவடிகளை பலப்படுத்தி வெற்றி வாக்குச்சாவ டியாக மாற்றிக்காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் எஸ்.அய்..ஆர். பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
வியூகத்தை விவாதித்து தலைமைக் கழகத்தில் சமர்ப்பித்தனர்!
இந்த வாக்குச்சாவடிக்கு 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து,ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினருக்கும் அவரவருக்கானஇலக்கை தி.மு.கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துக் கொடுத்தார்.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள், பூத் கமிட்டியினர், சார்பு அணியினர் கலந்து கொண்டு இலக்காக நிர்ண யிக்கப்பட்டுள்ள 440 வாக்குகளைப் பெறுவதற்கான வியூகத்தை விவாதித்து அதனை படிவத்தில் குறித்து தி.மு. தலைமைக் கழகத்தில் சமர்ப்பித்தனர்.
இக்கூட்டத்தில், கழக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, மயிலை மேற்கு பகுதிச் செயலாளர் நந்தனம் மதி, அவைத் தலைவர் ராஜேந்திரன், வட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜாசுரேஷ் குமார், பகுதி, வட்ட தி.மு. கழக நிர்வாகிகள், வாக்குச்சாவாடிக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தி.மு. கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: –
‘‘எந்த ஷா வந்தாலென்ன?எத்தனை திட்டம் போட்டாலென்ன?
டில்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்புசிவப்புப் படை உங்களுக்குத் தக்கப் பாடம் புகட்டும்!
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டில்லிக்கு Out of Control தான்!
#என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி.’’
இவ்வாறு தி.மு. கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
